பல்கலைக்கழக மாணவிகள் 3 ஆயிரம் பேரை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞன்

Published By: Vishnu

14 Oct, 2022 | 11:55 AM
image

அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழகம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 3,000 மாண­வி­களை கொலை செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­ட­தாக ஓர் இளைஞர் ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

22 வய­தான ட்ரெஸ் ஜென்கோ எனும் இந்த இளைஞன், ஒஹையோ மாநி­லத்­தி­லுள்ள பல்­க­லைக்­க­ழகம் ஒன்றின் 3,000 மாண­வி­களை கொல்­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்­ததை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (11) ஒப்­புக்­கொண்டார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.  மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரை அதி­கா­ரிகள் வெளி­யி­ட­வில்லை.

பெண்­களை பாலியல் ரீதி­யாக ஈர்க்க தம்மால் முடி­யா­தெனக் கருதும், பெண்கள் மீது வெறுப்­பு­ணர்வு கொண்ட இணை­ய­வழி குழு ஒன்றின் அங்­கத்­தவர் (Incel--) என தன்னை ட்ரெஸ் ஜென்கோ கூறிக்­கொள்­கிறார்.

இவர் பெண்கள் பல்­க­லைக்­கழகம் ஒன்றில் துப்­பாக்கிப் பிர­யோகம் மூலம் 3,000 பேரை கொல்­வ­தற்கு திட்­ட­மிட்­ட­தா­கவும் இதற்­காக குறிப்­பொன்றை எழு­தி­ய­துடன், பெண்கள் பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக  இணை­யத்தில் தேடுதல் நடத்­தி­ய­தா­கவும் வழக்குத் தொடு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

வெறுப்பு, பொறாமை, பழி­வாங்கல் நோக்­கங்­க­ளுக்­காக பெண்­களை தான் கொலை­செய்­ய­வுள்­ள­தாக மேற்­படி குறிப்பில் ஜென்கோ தெரி­வித்­தி­ருந்தார். மேற்­படி குறிப்பு அதி­கா­ரி­களால் பின்னர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இக் கொலைத்­திட்­டத்­துக்­காக, இவர் 2019 ஆம் ஆண்டு குண்­டு­து­ளைக்­காத அங்கி, கையு­றைகள், முக­மூடி, கத்தி, மெக­ஸின்கள் முத­லா­ன­வற்றை வாங்­கி­ய­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

இவர் 2019ஆம் ஆண்டு ஆரம்ப இரா­ணுவப் பயிற்­சியில் பங்­கு­பற்றி, பின்னர் அதி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

2020 ஜன­வ­ரியில் இவர் மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தில் கண்­கா­ணிப்­பு­க­ளையும் நடத்­தினார், இக்­கொலைத் திட்­டத்­துக்­காக இணை­யத்­திலும் தேடுதல் நடத்­தினார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

ஒஹையோ மாநி­லத்­தி­லுள்ள ஜென்­கோவின் வீட்டில் 2020 மார்ச் 12 ஆம்  திகதி பொலிஸார் தேடுதல் நடத்­தினர். அதன்­போது ஜென்­கோவின் படுக்கை அறையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த துப்­பாக்­கி­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அத்­துப்­பாக்­கியைத் தயாரித்த நிறுவனத்தின் அடையாளம், இலக்கம் எதுவும் அதில் இருக்கவில்லை. 

அவரின் காரிலிருந்து துப்பாக்கி, பல மகஸின்கள், தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள்  ஆகியன கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21