நகர்வல ஓட்டத்தில் நிர்மான், அமாஷி தங்கம் வென்றனர்

Published By: Digital Desk 5

14 Oct, 2022 | 08:55 AM
image

(என்.வீ.ஏ.)

கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அளுத்கங்கொட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த லகிது நிர்மானும் பெண்கள் பிரிவில் சிலாபம் பங்கதெனிய தேசிய பாடசாலையைச் சேர்ந்த புத்திமா அமாஷியும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

கம்பஹாவில் நடைபெற்ற  5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில்   17 நிமிடங்கள் 20 செக்கன்களில் நிறைவு செய்த லகிது நிர்மான் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அப் போட்டியில் மத்துகமை ஆனந்த ஷாஸ்த்ராலய தேசிய பாடசலையைச் சேர்ந்த ப்ரமில ஹர்ஷண (17 நி. 32 செக்) வெள்ளிப் பதக்கத்தையும் நீர்கொழும்பு கிறிஸ்துராஜா தேசிய பாடசாலையைச் சேர்ந்த கவிஷ்க நிலாஷ் (17 நி. 38 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்களுக்கான 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டியை 21 நிமிடங்கள் 04 செக்கனில் நிறைவுசெய்த புத்திமா அமாஷி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

குருநாகல் சுமணசார மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தருஷி தில்மினி (21 நி. 43 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் கம்பஹா பிட்டதெனிய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷானி பியூமிகா (21 நி. 49 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35