இளைஞர்களின் அறிவு திறன்களை பயன்படுத்தினால் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியும்

Published By: Digital Desk 3

13 Oct, 2022 | 04:49 PM
image

(செய்திப்பிரிவு)

நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியும் எனவும், இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள முடியும் எனவும் ஜி.புளொக் தலைவர் ரணில் வில்லத்தரகே தெரிவித்துள்ளார்.

படுவஸ்நுவர பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 'ஜி.புளொக் லைப்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த பருவத்திற்கான நெற்செய்கையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

நாட்டில் டொலர் நெருக்கடி உள்ளது. அதை சமாளிப்பதற்கு அதிக ஆடை தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் வழங்க வேண்டும். தற்போது, பொருளாதார சவால்களை சமாளிக்க தேவையான டொலர்களை சம்பாதிப்பதில் ஆடைத் துறை பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. 

சிறந்த இலங்கை வர்த்தக நாமங்களை சர்வதேச சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதற்காக ஜி.புளொக் வெளிநாட்டு வர்த்தக நாமங்களுடன் போட்டியிட்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தேவையான டொலர்களை சம்பாதிப்பதில் ஈடுபட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்க, உற்பத்திப் பொருளாதாரத்தை நாம் பின்பற்ற வேண்டும். நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அந்தப் பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட வைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்குக் கொண்டு வர முடியும்.

குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். இப்போதெல்லாம், படைப்பாற்றல் மிக்க இளைஞர்கள் இணையம் மூலம் வணிகம் செய்ய அதிக விருப்பத்துடன் உள்ளனர். மேலும் அத்தகைய வணிகங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும்.

இவ்வாறான நிலையில், குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்கும் வகையில் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமது பொறுப்பாகும். அதற்காக ஜி.புளொக்  சமூக நலத் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. 

சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நல்ல சமூகப் பின்னணியை உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பங்களிப்பதாக அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57