`காந்தாரா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

13 Oct, 2022 | 09:04 PM
image

ன்னட மொழியில் தயாராகி மாபெரும் வசூல் வெற்றியை பெற்ற 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு எதிர்வரும் 15ஆம் திகதியன்று வெளியாகிறது. 

தற்போது இப்படத்தின் முன்னோட்டம் நடிகர் கார்த்தியால் அவரது இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரிஷப் ஷெட்டி கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'காந்தாரா'. 

இவருடன் கிஷோர், அச்யுத்குமார், பிரமோத் ஷெட்டி, நடிகை சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். 

கர்நாடக மண்ணின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கம்மாள விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தை 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரண்கதூர் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படம் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியானது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம், உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35