குழந்தை வளர்ப்புக்கான அறிவுரைகள்

Published By: Devika

11 Oct, 2022 | 04:35 PM
image

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். 

* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். 

* குழந்தை வளர்ப்பான் ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து­விட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது. 

* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தை­களுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமை­யும். 

* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது. 

* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும். 

* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 

* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும். 

* குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம். 

* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்