இலங்கை அணிக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் நியூ­ஸிலாந்து அணி 7 விக்கெட் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

இலங்கை- – நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டி க்றைஸ்ட் சேர்ச்சில் நேற்று நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்­த­லைவர் எஞ்­சலோ மெத்­தியூஸ் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார்.

இதன்­படி ஆரம்ப துடுப்­பாட்ட ஜோடி­யாக தில­க­ரட்ண டில்­ஷா­னுடன் தனுஷ்க குணத்­தி­லக கள­மி­றங்­கினார். டில்ஷான் (9) , குண­தி­லக்க(8) நிலைக்­க­வில்லை. இதை­ய­டுத்து வந்த லஹிரு திரி­மான்ன ஒரு ஓட்­டத்­து­டனும் , சந்­திமால் 5 ஓட்­டங்­க­ளு­டனும் வெளியே­றினர்.

இதன்­பின்னர், அணித்­த­லைவர் மெத்யூஸ் அணியை சரி­வி­லி­ருந்து மீட்­டெ­டுப்பார் என எதிர்ப்­பார்க்­கப்­பட்ட போதும், முதல் பந்தில் ஓட்­ட­மெ­த­னையும் பெறாமல் அரங்கு திரும்­பினார்.

நீண்ட இடை­வே­ளைக்குப் பின்னர் அணிக்குத் திரும்­பிய சாமர கப்­பு­கெ­தர 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, இலங்கை அணி 65 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்­டு­களை இழந்து தடு­மா­றி­யது.

இந்­நி­லையில் 7 ஆவது விக்­கெட்­டுக்­காக ஜோடி சேர்ந்த நுவன் குல­சே­கர, மிலிந்த சிறி­வர்த்­தன ஜோடி சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தாடி அணியை சரி­வி­லி­ருந்து மீட்­டெ­டுத்­தது. மிலிந்த சிறி­வர்­தன 65 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். அதி­ர­டி­யாக விளை­யா­டிய குல­சே­கர 5 சிக்­ஸர்­க­ளுடன் 58 ஓட்­டங்களை குவித்தார்.

இறு­தியில் இலங்கை அணி 47 ஓவர்­களில் சகல விக்­கெட்­டு­க­ளையும் இழந்து 188 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றுக்­கொண்­டது.

பந்­து­வீச்சில் நியூ­ஸி­லாந்து அணி சார்பில், மெட் ஹென்றி 4 விக்­கெட்­டு­க­ளையும், பிரேஸ்வெல் 3 விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்­றினர்.

நியூ­ஸிலாந்து அணிக்கு தொடக்க வீரர்­க­ளாக மார்டின் குப்தில், பிரெண்டன் மெக்­கலம் கள­மி­றங்­கினர். 189 ஓட்­டங்கள் என்ற இல­கு­வான இலக்கை நோக்கித் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து ஆரம்பம் முதலே அதி­ர­டி­யாகத் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. .

தொடக்­கத்­திலே அதி­ர­டியை தொடர்ந்த இவர்கள் அரை­சதம் கடந்­தனர். மெக்­கலம் 25 பந்தில் 55 ஓட்­டங்கள் (11 பவுண்­டரி, 1 சிக்சர்), குப்தில் 56 பந்தில் 79 ஓட்­டங்கள் (9 பௌண்­டரி, 4 சிக்ஸர்) எடுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். டொம் லெதம் 18 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். இறு­தியில் நியூ­ஸி­லாந்து அணி 3 விக்­கெட்­டு­களை மாத்­திரம் இழந்து 21 ஓவ­ர்களில் 191 ஓட்­டங்கள் எடுத்து 7 விக்­கெட்­டு­களால் வெற்றி பெற்­றது. டெய்லர் 5 ஓட்­டங்­க­ளையும், நிக்­கொலஸ் 23 ஓட்­டங்­க­ளையும் ஆட்­ட­மி­ழக்­காமல் பெற்­றுக்­கொ­டுத்­தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மிலிந்த சிறிவர்தன 2 விக்கெட்டுகளையும் டில்ஷன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸி லாந்து அணி 1 – -0 என முன்னிலையில் உள்ளது. 2 ஆவது போட்டி 29 ஆம் திகதி ஆ நடைபெறும்.