(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

விமான படை கட்டுப்பாட்டில் உள்ள இரம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென  தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சின்  செலவினம் மீதான குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இரம்பைக்குளம் மகளிர் கல்லூரி மைதானம் விமான படை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை ஏற்கனவே விமான படை விடுத்தாலும் விளையாட்டு மைதானத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை விமான படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.  ஆகவே குறித்த விளையாட்டு மைதானத்தை விமான படையிடமிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.