வெனிசுவெலாவில் மண்சரிவு ; வீடுகள் சேதம் ; 25 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

10 Oct, 2022 | 03:07 PM
image

வெனிசுவெலாவின் தலைநகர் கராகஸின் தெற்கே உள்ள லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவினால் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

லா நினா வானிலையால் ஏற்பட்ட மழையில் மண்சரிவில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதோடு,   50 பேர் காணமல் போயுள்ளார்கள்.

வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நிலைமையை கடினமானது மற்றும் வேதனையானது என கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துணை ஜனாபதி   டெல்சி ரோட்ரிக்ஸ் ஞாயிற்றுக்கிழமை  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். காணாமல் போனவர்களைக் தேடும் பணியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என  தெரிவித்துள்ளார்.

சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல் பாடோ ஆற்றின் கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல வீடுகள் மற்றும் கடைகளை அடித்துச் சென்றதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கராகஸில் இருந்து 67 கிமீ (42 மைல்) தொலைவில் உள்ள லாஸ் டெஜெரியாஸ், இந்த ஆண்டு லா நினா வானிலையால் வெனிசுலாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

லா நினா (La - Nina) என்பது இயற்கையாக நிகழும் நிகழ்வாகும், இது பசிபிக் பெருங்கடலின் குளிர்ச்சியை உள்ளடக்கியது.  பொதுவாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஈரமான நிலைமைகளை கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17