முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் கே.வி. அனுதீப் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் 'பிரின்ஸ்'.
இதில் சிவகார்த்திகேயன் ஆசிரியர் வேடமேற்று நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா தமிழ் கற்பிக்கும் ஆசிரியையாக வேடமேற்று நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ஆனந்தராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
சாதிக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படத்தை சுனில் நரங், டி. சுரேஷ் பாபு, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் இப்போது வெளியாகியுள்ளது.
முன்னோட்ட காட்சிகளில் சிவகார்த்திகேயன் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராகவும், நாயகி மரியா அதே பாடசாலையில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியையாகவும் வருகிறார்கள்.
சாதி மோதல்கள் இருக்கும் அந்த ஊரில் சிவகார்த்திகேயனின் மேலைத்தேய நாட்டுப் பெண்ணின் மீதான காதல் என்ன ஆனது என்பதுதான் சுவாரஸ்யமான கதையாக இருக்கிறது.
'டான்' படத்தில் கல்லூரி மாணவராக அட்டகாசம் செய்த சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' படத்தில் ஆசிரியராக நடித்திருப்பது, ரசிகர்களிடையே எத்தகைய வரவேற்பை பெறும் என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.
இருப்பினும், 'பிரின்ஸ்' படத்தின் முன்னோட்டம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வசப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM