தீயணைப்புப் படை வாகனத்திலிருந்து இறங்கிய நீச்சலுடைப் பெண்

Published By: Vishnu

10 Oct, 2022 | 11:18 AM
image

தீய­ணைப்புப் படை­யி­னரின் வாக­ன­மொன்­றி­லி­ருந்து, நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்த பெண்­ணொ­ருவர் இறங்கிச் சென்ற சம்­பவம் குறித்து அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கலி­போர்­னியா மாநி­லத்தின் சான் ஜோஸ் நக­ரில் ­க­டந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

துகி­லுரி நடன விடு­தி­யொன்­றுக்கு முன்னால் வீதி­யோ­ரத்தில் நிறுத்­தப்­பட்ட தீய­ணைப்­புத்­துறை வாக­னத்­தி­லி­ருந்து நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்த பெண்­ணொ­ருவர் இறங்கி நடந்து செல்லும் காட்சி அடங்­கிய வீடியோ அண்­மையில் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

அப்பெண் நேராக மேற்­படி துகி­லுரி நடன விடு­தி­யொன்­றுக்கு நடந்து சென்றார்.

குறித்த பெண், அவ்­வே­ளையில் மேற்­படி விடு­தி­யினால் பணிக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை.

அரு­கி­லுள்ள வர்த்­தக நிலை­யத்­தி­லி­ருந்த ஒருவர் இது குறி­தது கூறு­கையில், 'என்ன சொல்­வ­தென்று தெரி­ய­வி­லலை. அப்பெண் மேலாடை எதுவும் அணிந்­தி­ருக்­க­வில்லை. அப்பெண் தீய­ணைப்பு வாக­னத்­துக்குள் என்ன செய்­து­கொண்­டி­ருந்தார், யார் அந்த வாக­னத்தை இயக்­கி­னார்கள், அதற்கு யார் பொறுப்­பாக இருந்­தாரக்ள், ஏன் இதை அவர்கள் அனு­ம­தித்­தார்கள் எனத் தெரி­ய­வில்லை' எனக் கூறி­யுள்ளார்.

மேற்­படி வீடியோ இணை­யத்தில் வைர­லா­கி­ய­தை­ய­டுத்து, இச்­சம்­பவம் குறித்து தான் விசா­ரணை நடத்­து­வ­தாக சான் ஜோஸ் தீய­ணைப்புத்  திணைக்­களம் தெர­ிவித்­துள்­ளது.

அதே­வேளை, இது  ஒரு மோசமான நடவடிக்கை என விசாரணையில் கண்டறியப்பட்டால் சிலர் பணிநீக்கம் செய்யப்படுவர் என சான் ஜோஸ் நகர மேயர் சாம் லிக்கார்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right