தேசிய சபையின் உப குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

Published By: Digital Desk 5

08 Oct, 2022 | 10:40 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) 

தேசிய சபையினால் நியமிக்கப்பட்ட குறுகிய,நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய சபையின் உப குழு நேற்று கூடிய போது இந்த நியமனம் வழங்கப்பட்டது.

உப குழுவின் தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவின் பெயரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்மொழிந்ததுடன்,அதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழிமொழிந்தார். கொள்கைத் தயாரிப்புத் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அரச நிர்வாகக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,நவீனமயப்படுத்தல்,சுகாதாரம்,மற்றும் கல்விக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,மீன்பிடி,உணவுக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,மின்சக்தி மற்றும் வலுசக்தி கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,தொழில் முனைவுகள் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல் தொடர்பில் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள குறித்த துறைசார் நிபுணர்களை தேசிய சபையின் உபகுழுலுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய குறுகிய கால யோசனைகளை ஒருமாத காலத்துக்குள்ளும்,நடுத்தரகால யோசனைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும்,நீண்டகால யோசனைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய சபைக்கு சமர்ப்பிக்க குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47