ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி சர்வதேசத்தை வெற்றிகொள்வதில் அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகின்றது - சஜித்

Published By: Nanthini

07 Oct, 2022 | 10:19 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது ஜெனிவாவில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மனித உரிமைகள் பேரவையில் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. 

எங்களுக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. அத்துடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன. 

இதில் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாடுகளை பார்க்கும் போது அந்த நாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஏன் மற்றைய நாடுகளுடனும் கலந்துரையாடி பேச்சுவார்த்தை மூலமாக ஏன் எமது நாட்டின் பயணத்தை வெற்றிகொள்ள முடியவில்லை.

சர்வதேசத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் இருக்கின்றது என்றே நினைத்தோம். ஆனால் ஜெனிவாவில் எமக்கு ஏற்பட்ட தோல்வி மூலம் சர்வதேசத்தை வெற்றிகொள்வதில் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. 

அத்துடன் முதற்தடவையாக மனித உரிமை பேரவையில் பொருளாதார குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்குரோத்து அரசாங்கம் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22