வரலாற்று சர்ச்சைகளும் வளர்ந்து வரும் மூலோபாய கவலைகளும் : சீனாவுக்கான குவாட் நாடுகளின் மறைமுக செய்தி

Published By: Nanthini

07 Oct, 2022 | 05:20 PM
image

சீனாவுடனான குவாட் நாடுகளின் நீண்ட கால பிரச்சினைகள் மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் மூலோபாய மாற்றங்களில் மேலோங்கியுள்ள கவலை பிராந்தியத்தில் அவ்வப்போது கொந்தளிப்புகளை ஏற்படுத்துகின்றன.  

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதுடன், சீனாவுக்கு மறைக்கப்பட்ட செய்திகளை குவாட் நாடுகள் அனுப்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் என அனைத்து குவாட் உறுப்பு நாடுகளும் அதன் விரிவாக்க இலக்குகளை தொடர முயற்சிக்கும் அதேவேளை, சீனாவுடன் வரலாற்றுச் சிக்கல்களையும் கொண்டுள்ளன. 

முதலில் இந்தியா 2,167 மைல் சீன - இந்திய எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல முரண்பாடுகள் உள்ளமையை தி டிப்ளமேட் சர்வதேச செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

குவாட் உறுப்பினர்களுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளும் இறுக்கமாகியுள்ளன. 

ஜப்பானால் நிர்வகிக்கப்படும் சென்காகு மற்றும் டியோயு தீவுகளின் இறையாண்மை குறித்து சீனா தொடர்ந்து சர்ச்சையை கிளப்புகிறது. இந்த தீவுகள் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. 

அடுத்து அவுஸ்திரேலியா. சீனாவுடனான சொலமன் தீவின் பாதுகாப்பு ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவை எரிச்சலடையச் செய்துள்ளது. சொலமன் தீவை சீனாவுடன் நெருக்கமாக இணைப்பது குறித்து அவுஸ்திரேலியா எச்சரிக்கையாக உள்ளது.

அதேபோன்று அமெரிக்கா, உலகின் பழமையான ஜனநாயகம். தைவான் ஜலசந்தியின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவும் சீனாவும் இழுபறியில் உள்ளன. தைவானின் தற்போதைய நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அந்நாடு தனது இராணுவ பலத்தை பயன்படுத்தும் என்று அமெரிக்கா தெளிவான செய்திகளை அனுப்பி வருகிறது.

மறுபுறம் சீனா, தைவான் தனது பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும் என்று கூறுகிறது. 

குவாட் உறுப்பினர்களுடனான சீனாவின் இந்த நீண்ட கால பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொரு குவாட் தேசத்தினது இராணுவத்தின் தனிப்பட்ட கவனத்தை சீனாவை நோக்கி உறுதியாக செலுத்துகின்றன. 

இந்த வரலாற்று சர்ச்சைகள் மற்றும் வளர்ந்து வரும் மூலோபாய கவலைகள் அனைத்தும் தற்போதைய நிலையை பராமரிப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

சீனா மற்றும் தைவானின் இராணுவத்திறன்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. அதனால்தான் மக்கள் விடுதலை இராணுவத்தை சிறிய தீவு எவ்வளவு எதிர்க்க முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. 

மறுபுறம், லடாக். இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரே மோதலின் பின்னணியில் வரையப்பட்ட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டால் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. நேட்டோவை போலவே குவாட் இந்த பகுதியை பார்க்கின்றது. அதிக ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் நீண்ட காலமாக தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு நெருக்கமான கூட்டணியை உருவாக்கவும், உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த சீனாவை கட்டுப்படுத்தவும் பன்முகப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒத்துழைக்க முடியும் என குவாட் அமைப்பு  நம்புகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47