ஹரீன், கெஹலிய, செஹான் உள்ளிட்டோரின் நிலுவை மின்கட்டணம் பல இலட்சமாக உயர்வு - தயாசிறி

Published By: Digital Desk 5

07 Oct, 2022 | 04:11 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நான் மட்டும் மின்சார கட்டணத்தை செலுத்தாமலிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை பொய்யானதாகும்.

அமைச்சர்களான ஹரீன் பெர்னான்டோ,கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உள்ளிட்டோரின் நிலுவை மின்கட்டணம் பல இலட்சமாக உயர்வடைந்துள்ளது என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மின்கட்டண நிலுவை விவாரத்தில் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது,ஆகவே மின்சார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (06) சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது மாதாந்த மின்கட்டணம் 11 இலட்சமாக உள்ள நிலையில் அதனை செலுத்தாவிடின் மின் விநியோகத்தை துண்டிப்பதாக இலங்கை மின்சார சபை எனக்கு அறிவித்துள்ளதாக தேசிய பத்திரிகைகளிலும்,சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளன.

11 இலட்சம் மின்சார கட்டணத்தை நான்  செலுத்தாமல் இருப்பதாக வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொய்யான விடயத்தை குறிப்பிட்டு பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்.நான் வகித்த மூன்று அமைச்சுக்களின் மின் நிலுவை கட்டணம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டணம் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன்,இந்த மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு காலவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இந்த மின்கட்டண விவகாரத்தினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.நான் மாத்திரம் தான் மின்கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ 14 இலட்சத்து 54ஆயிரம் ரூபாவும்,கெஹெலிய ரம்புக்வெல 7 இலட்சம் ரூபாவும்,செஹான் சேமசிங்க 2.இலட்சத்து 24 ரூபாவும் மின் கட்டணம் செலுத்தவுள்ளதை அவர் குறிப்பிடவில்லை.

அரசாங்கத்தின் ஊழல் மோசடியை சுட்டிக்காட்டுவதால் என்மீது சேறுபூசப்படுகிறது.மின்கட்டணம் தொடர்பில் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்ட இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் ஒருசில ஊடகவியலாளர்களை ஓழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31