மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல டென்மார்க் வீரர்­க­ளுக்குத் தடை!

Published By: Vishnu

07 Oct, 2022 | 10:13 AM
image

இவ்­வ­ருடம் கத்­தாரில் நடை­பெறும் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்றும் டென்மார்க் அணி வீரர்கள் தமது மனை­விமார், காத­லி­களை தம்­முடன் டென்­மார்க்­குக்கு அழைத்துச் செல்­வ­தற்கு டென்மார்க் அதி­கா­ரிகள் தடை விதித்­துள்­ளனர். 

கத்­தாரின் மனித உரி­மைகள் நிலை­வ­ரத்­துக்கு தமது எதிர்ப்பை வெளி­யிடும் வகையில், இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தான கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் வீரர்கள் உலகப் பிர­சித்தி பெற்­ற­வர்­க­ளாக விளங்கும் நிலையில் அவர்­களின் மனை­விமார், காத­லி­களும் பிர­ப­ல­மாக விளங்­கு­கின்­றனர். அப்­பெண்கள் குறித்த தக­வல்­களை அறிந்­து­கொள்­வ­தற்கு மக்கள் ஆர்வம் செலுத்­து­கின்­றனர்.

சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளின்­போது வீரர்­க­ளுடன் அவர்­களின் துணை­வி­யர்­களும் செல்­வது வழக்கம். 

இவ்­வ­ருட உலகக் கிண்ண சுற்­றுப்­போட்­டிக்கு தகுதி பெற்­றுள்ள பல நாடுகள் தமது வீரர்­க­ளுடன் அவர்­களின் குடும்­பங்­களும் கத்தார் செல்­வ­தற்கு அனு­ம­தி­வ­ழங்­கி­யுள்­ளன.

எனினும், டென்மார்க் வீரர்கள் தம்­முடன் தமது குடும்­பத்­தி­னரை அழைத்துச் செல்­வதை டென்மார்க் கால்­பந்­தாட்டச் சங்கம் தடை செய்­துள்­ளது.

கத்­தாரின் மனித உரி­மைகள் நிலை­வ­ரத்­துக்கு எதிர்ப்பை வெளி­யிடும் வகையில், அந்­நாட்டில் டென்­மார்க்­கி­யர்­களின் செயற்­பா­டு­களை மட்­டுப்­ப­டுத்திக் கொள்ள டென்மார்க் அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.  

 டென்மார்க் கால்­பந்­தாட்ட சங்­கத்தின் ஊடக முகா­மை­யாளர் ஜேக்கப் ஹோயர் இது தொடர்­பாக எக்ஸ்ட்ரா பிளேடெட் எனும் பத்­தி­ரி­கை­யிடம் பேசு­கையில், 'கத்­தா­ருக்கு லாபத்தை ஏற்­ப­டுத்­து­வதில் பங்­க­ளிப்புச் செய்ய நாம் விரும்­ப­வில்லை' எனத் தெரி­வித்­துள்ளார்.

'எனவே முடிந்­த­ளவு நாம் எமது பயணச் செயற்­பா­டு­களை குறைத்துக் கொள்­கிறோம். 

இதற்கு முன்னர் நடை­பெற்ற உலகக் கிண்ண இறுதிச் சுற்­றுப்­போட்­டி­களில் வீரர்­களின் மனை­வி­யரும் காத­லி­களும்  கால்­பந்­தாட்டச் சங்­கத்­தி­ன­ருடன் பயணம் செய்­தனர். ஆனால் இம்­முறை அப்­ப­ய­ணத்தை நாம் ரத்துச் செய்­துள்ளோம்' எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் யுனைடெட் கழ­கத்­துக்­காக விளை­யாடும் டென்மார்க்  வீரர் கிறிஸ்­டியன், எரிக்சன், டொட்­டென்ஹாம் கழக வீரர் பியெரி எமிலி ஹோஜ்பேர்க், கிறிஸ்டல் பலஸ் கழக வீரர் ஜோக்கிம் அண்­டர்சன், லெய்­செஸ்டர் வீரர்கள் ஜெனிக் வெஸ்­டர்கார்ட், டேனியல் ஐவர்சென், லீட்ஸ் கழக வீரர் ரஸ்முஸ் கிறிஸ்­டி­யன்சென் ஜேர்­மனின் வோல்வ்பேர்க் கழ­கத்தில் விளை­யாடும் ஜோனாஸ் வைண்ட். ஆகி­யோரும் இத்­த­டை­யினால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­களில் சில­ராவர். 

கத்­தாரில் பணி­யாற்­றிய தெற்­கா­சிய தொழி­லா­ளர்­களில், 2010 ஆம் ஆண்­டின்பின்  6500 பேர் உயி­ரி­ழந்­துள்னர் என பிரிட்­டனின் கார்டின் பத்­தி­ரிகை ஆய்வு ஒன்று 2021 பெப்­ர­வ­ரியில் தெரி­வித்­தி­ருந்­தது. தொழி­லா­ளர்­களின் மர­ணங்கள் தொடர்­பாக கத்தார் போதி­ய­ளவு அறி­விப்­ப­வ­தில்லை என சர்­வ­சேத தொழி­லாளர் ஸ்தாபனம் தெரி­வித்­தி­ருந்­தது. 

எனினும், உலகக் கிண்ண சுற்­றுப்­போட்­டியை நடத்­து­வ­தற்­கான திட்­டத்தால் ஆயி­ரக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர் எனக் கூறப்­ப­டு­வதை கத்தார் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.  

டென்மார்க் கால்­பந்­தாட்டச் சங்­கத்தின் சபை உறுப்­பி­னர்­களின் கத்தார் பய­ணங்­க­ளுக்கும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. சபையின் அங்­கத்­த­வர்கள் டென்­மார்க்கின் தலா ஒரு போட்­டி­யின்­போது  மாத்­தி­ரமே சமு­க­ம­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டுவர் எனவும், ஒவ்வொரு போட்டியிலும், சபையின் இரு அங்கத்தவர்களுக்கு மேல் அனு மதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி கத்­தாரில் எதிர்­வரும் நவம்பர் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. டென்மார்க் அணி நவம்பர் 20 ஆம் திகதி தனது முதல் போட்­டியில் டுனீ­சி­யா­வுடன் மோதவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35