கடலாமையைக் கொன்று விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது

Published By: Vishnu

06 Oct, 2022 | 07:17 PM
image

வண்ணாத்திவில்லு சேராக்குழி கடற்கரையோரப்பகுதியில் கடலாமையைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்வதற்கு கொண்டு செல்ல முற்பட்ட மூவர் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கடலாமையை இறைச்சிக்காக கொள்ளப்படுவதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள உதவி ஆனையாளர் எரந்த கமகேவிற்கு கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தலைமையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பில் 21 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமையின் ஓடு 361 கடலாமை முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்திய கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் சேராக்குழி பகுதியைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட  இறைச்சி மற்றும் ஆமையின் முட்டைகள் இறைச்சிக்காக பயன்படுத்திய கத்திகள் ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கடலாமை (Olive Ridley) ஒலிவ நிற இனத்தைச் சார்ந்தது எனவும் குறித்த கடலாமை இறைச்சிக்காக அதிகமாக கொள்ளப்பட்டு வருவதினால் அழிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37