முடிவுக்கு வந்தது முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் போராட்டம்

Published By: Vishnu

06 Oct, 2022 | 06:13 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடம்மாற்றக்கோரியும் 24 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்களின் போராட்டம் இன்று 06.10.22 நான்காவது நாளாக தொடர்கின்றநிலையில், கொழும்பிலிருந்து வருகைதந்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு விசாரணையினை தொடங்கியுள்ளது.

அதிகாரிகளின் விசாரணை இன்று 06.10.22 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரியாத்தை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கோரிக்கையினை முன்வைத்து தொடர்ந்து போராடிவரும் மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாசம் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முல்லைத்தீவு பங்கு அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் ஆகியோர் தங்கள் முறைப்பாட்டினை விசாரணைக்குழுவிடம் முன்வைத்துள்ளார்கள்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட தொழிலுக்கு ஆதரவான  மற்றைய மீனவ அணியின் பிரதிநிதிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் மீனவர்கள் தங்கள் போராட்டத்தினை இன்றுடன் நிறைவிற்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொடர் போராட்டகாரர்கள்,

கொழும்பில் இருந்து விசாரணைக்குழு விசாரணை செய்துள்ளது. 8பேர் சென்றுள்ளார்கள் நல்ல பதிலினை எங்களுக்கு தரலாம் என விசாரணைகுழு தரலாம் என்று சொல்லப்பட்டதற்கு அமைய அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு போராட்டத்தினை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளோம்.

எதிர்வரும்  12 ஆம் திகதி கடற்தொழில் அமைச்சரும் நல்லதொரு பதிலினை கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் இன்று போராட்டத்தினை இந்த இடத்தில் இருந்து விலகி செல்கின்றோம். தவறும் பட்சத்தில் அடுத்தகட்டம் என்ன செய்யாலம் என்று சங்கங்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அ.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கோரிய போராட்டத்திற்கு ஒத்துளைப்பு நல்கிய அனைத்து உறவுகளுக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளர்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08