வட, கிழக்கில் சமுர்த்தி உதவிகளின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் - சாணக்கியன் சபையில் தெரிவிப்பு

Published By: Vishnu

06 Oct, 2022 | 07:07 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்..ஆர்.எம்.வசீம்)

வடக்கு  மற்றும்  கிழக்கு மாகாணங்களில்  சமுர்த்தி  உதவித்தொகை  பெறுவதற்கு தகுதி இருந்தும் இதுவரை அந்த உதவிகள் கிடைக்காத பல்லாயிரக் கணக்கான மக்கள் காணப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 42,000 பேர் சமுர்த்தி கொடுப்பனவை பெற தகுதியுடையவர்களாக உள்ளார்கள் என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 154 சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் உள்ளது.சமூர்த்தி உதவிபெறுவோருக்கான பட்டியல் முறையாக தயாரிக்கப்படாமைக்கு அதுவும் ஒரு காரணம் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டால் சமுர்த்தி உதவி வழங்கல் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்..

பாராளுமன்றத்தில் இன்று (06) வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் கேள்வி ஒன்றை எழுப்பிய சாணக்கியன் இராசமாணிக்கம் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் அனுர பெஸ்குவலிடம் வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தாய்,பிள்ளைகள் என ஒரே வீட்டுக்குள்ளேயே அனைவரும் வாழ்கின்றனர். அவ்வாறான குடும்பங்களில் தாய்க்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டால் அவரது மகனது குடும்பத்திற்கு சமுர்த்தி உதவி வழங்கப்படுவதில்லை. அவ்வாறு பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் இருந்தாலோ  அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்று அல்லது முச்சக்கர வண்டி ஒன்றை வைத்திருந்தாலோ அவர்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கப்படுவதில்லை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் உள்ள ஒருவர் உழைக்கும் வருமானம் அவரது குடும்பத்தைப் பராமரிக்க போதாமல் இருக்கும். அவ்வாறுள்ள நிலையில் இரண்டு மூன்று குடும்பங்கள் உள்ள ஒரு வீட்டில் முழு குடும்பத்திற்கும் அவரது வருமானத்தில் ஈடு செய்ய முடியாது. 

வடக்கு  மற்றும்  கிழக்கு மாகாணங்களில்  சமுர்த்தி  உதவித்தொகை  பெறுவதற்கு தகுதி இருந்தும் இதுவரை அந்த உதவிகள் கிடைக்காத பல்லாயிரக் கணக்கான மக்கள் காணப்படுகின்றனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 42,000 பேர்  சமுர்த்தி கொடுப்பனவை பெற தகுதியுடையவர்களாக உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 154 சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் உள்ளது.சமூர்த்தி உதவிபெறுவோருக்கான பட்டியல் முறையாக தயாரிக்கப்படாமைக்கு அதுவும் ஒரு காரணம் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டால் சமுர்த்தி உதவி வழங்கல் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04