(சசி)

கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள இலங்கை வங்கியின் தன்னியக்க பணம் பெறும் இயந்திரமுள்ள கட்டட பகுதிக்குள் இராட்சத முதலை ஒன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகளவான பருவப்பெயர்சி மழை பெய்து வருவதனால் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கி வருகின்றன. இதன் காரணமாக நீர்வாழ் உயிரினமான முதலைகள் நீர் நிலைகளை விட்டு குடிமனைகளுக்குள் வர தொடங்கியுள்ளன.

இவ்வாறான நிலையில் நேற்று இரவு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் இலங்கை வங்கியின் தன்னியக்க பணம் பெறும் இயந்திர கட்டடப் பகுதிக்குள் இராட்சத முதலை ஒன்று புகுந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து குறித்த இராட்சத முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு வேறு பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் மட்டக்களப்பில் முதலை இறந்துள்ளதுடன் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு தீண்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.