கோப் குழுவின் தலைமைத்துவம் பஷில் பக்கம் சென்றுவிட்டது - ஹேஷா விதானகே

Published By: Digital Desk 3

06 Oct, 2022 | 06:46 PM
image

(இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.வசீம்)

நாட்டு மக்கள் கடுமையாக வெறுக்கும் சபிக்கும் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்றம் செயற்படுகிறது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கோப் குழுவின் தலைமைத்துவம் பஷில் பக்கம் சென்றுவிட்டது. கோப் குழுவின் செயற்பாடுகள் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஜனாதிபதியின்  சிறப்பு உரை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்இ

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைஇஜனாதிபதி ஒரு வழி பிரதமர் பிறிதொரு வழி என்பதால் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

நாட்டு மக்கள் கடுமையாக வெறுக்கும்இசபிக்கும் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்றம் செயற்படுகிறது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரச தலைவர்கள் குறிப்பிடுகின்றன நிலையில் அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. கோப் குழுவின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.ஆனால் தற்போது கோப் குழுவின் தலைவர் பதவி பஷில் ராஜபக்ஷ பக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் கோப் குழுவின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.அரசாங்கத்தின் தேவைக்கமையவே கோப் குழு இனி செயற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.மாறாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை தனது விசேட உரை ஊடாக தடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை மீதான விவாதம் இடம்பெறுவது பயனற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04