வெலிக்கடை சிறை கொலைகள் : அறிக்கை வெளியிட்டால் அச்சுறுத்தல் ஏற்படும்

Published By: MD.Lucias

21 Nov, 2016 | 09:14 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் முன்னைய ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட ஆணைகுழுவின் அறிக்கை வெளியிட்டால் எதிர்கால விசாரணைக்கு தடையேற்படுவதுடன் சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் அதனை வெளியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சுக்கான செலவினை தொடர்பான விவாதத்தில் ஜே.வி.பி. எம்.பி விஜித்த ஹேரத் எம்.பி. எழுப்பிய கேளிவிக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே? ஏன் அவை இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை விஜித்த ஹேரத் எம்.பி. கேள்வி எழுப்பினார். 

இதன் போது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ பதிலளிக்கையில்,

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது விசேட துணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையை நாம் பார்த்தோம். அதில் உருப்படியான எதுவும் இல்லை. அந்த அறிக்கையில் நியாய தன்மையும் இல்லை. அத்துடன் அறிக்கையில் உள்ளவற்றை வெளியிட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதனாலேயே அறிக்கையில் பகிரங்கப்படுத்தவில்லை.

அத்துடன் இது தொடர்பில் நீதியான அறிக்கையை சமர்ப்பிக்க தற்போது மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை பகிரங்கப்படுத்தலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17