பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத அரிசி மீட்பு

Published By: Digital Desk 5

05 Oct, 2022 | 04:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தனிநபர் ஒருவருக்கு  சொந்தமான பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் உள்ள களஞ்சிசாலைகளில் இருந்து நுகர்வுக்கு பொருத்தமில்லாத 16,000 கிலோ அரிசி நேற்று செவ்வாய்க்கிழமை (04) பேருவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பேருவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேருவளை பொலிஸார், பேருவளை பொது சுகாதார பரிசோதகர் சங்கம், பேருவளை தேசிய சுகாதார நிறுவனம், பேருவளை வைத்திய அதிகாரிகள் காரியாலயம் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமில்லாத களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 16,000 கிலோ அரிசி  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசியினை கொழும்பு-வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு சென்று அங்கு மீண்டும் களஞ்சியப்படுத்தப்பட்டு நுகர்வுக்கு பொருத்தமான அரிசியாக மாற்றி மீளவும் அதனை விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் குறித்த அரிசி வகைகளை அளுத்கம, பேருவளை, தர்கா நகர், மக்கொன மற்றும் பயாலகல போன்ற பிரதேசங்களில் காணப்படும் இரவு நேர உணவகங்கள் மற்றும் சந்தைகளுக்கு குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இரசாயன பரிசோதனைகளுக்காக குறித்த அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த களஞ்சியசாலை பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39