மேற்கு ஆப்பிரிக்க உணவகமொன்றில் பெண்ணொருவரால் வாங்கிய உணவொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவுடைய இறைச்சி துண்டொன்று கிடைத்தமையாலட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் வாங்கிய குறித்த உணவை உட்கொள்ளும் போது , அதனுடன் கிடைக்கப்பெற்ற சூப் வகையொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவிலான இறைச்சி துண்டு இருந்துள்ளது.

பின்னர் குறித்த பெண் இது தொடர்பில் உணவகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதோடு,குறித்த பெண் அந்த இறைச்சி துண்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த இறைச்சி துண்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருந்து, அது மனிதர்களின் ஆணுறுப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகத்தில் இறைச்சி சமைக்கும் போது இவ்வாறு உருமாற்றம் அடைந்திருக்காலாம் என உணவக சமையற்காரர் தெரிவித்துள்ளார்.