வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும்  மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆயிரம் அறவிடுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று நிதியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மது போதையுடன் வாகனம் செலுத்தல், காப்புறுதி, வாகன அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள்  இல்லாமை, அதிவேகத்துடன் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் மற்றும் இடது பக்கமாக வாகனத்தை முந்துதல் போன்ற குற்றங்களுக்கே குறித்த தண்டப்பணம் அறவிடப்பட இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.