டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

Published By: Digital Desk 3

05 Oct, 2022 | 11:44 AM
image

டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டுபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள டுபாயின் புதிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான்  திறந்து வைத்துள்ளார்.

இந்த கோவிலானது, ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோவிலின் விரிவாக்கம் ஆகும். 

சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். டுபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பெப்ரவரி 2020இல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது கோவில் நிர்வாகம்.

தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். டுபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது. 

ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், டுபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் டுபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52