அடுத்த வருடம் முற்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் மற்றும் எதிர்­கால அர­சியல் நட வ­டிக்­கைகள் போன்­ற­வற்றை இலக்­கு­வைத்து "எமது ஸ்ரீ லங்கா சுதந்­திர முன்­னணி" என்ற பெயரில் அர­சியல் கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு வேண்­டிய சகல ஏற்­பா­டு­க­ளையும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி மேற்­கொண்டு வரு­வ­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் உரு­வா கும் "எமது ஸ்ரீ லங்கா சுதந்­திர முன்­னணி" யில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மஹிந்த அணி, தேசிய சுதந்­திர முன்­னணி, பிவித்­துரு ஹெல உறு­மய,வாசு­தேவ நாண­யக்­கார தலை­மை­யி­லான இட­து­சாரி ஜன­நா­யக முன்­னணி உள்­ளிட்ட மேலும் பல அமைப்­புக்­களும் இந்தப் புதிய கட்­சியில் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக அந்த வட்­டா­ரங்கள் மேலும் தெரி­விக்­கின்­றன.

அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் அறி­விப்­பை­வி­டுத்­ததும் இந்த அர­சியல் சக்தி குறித்து அறி­விக்­கப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது நாட­ளா­விய ரீதியில் காணப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்சி சபைத் தலை­வர்கள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான வேண்­டு­கோ­ளுக்­க­மை­யவும் முயற்­சியின் விளை­வா­க­வுமே இந்த முன்­னணி தோற்றம் பெறு­வ­தா­கவும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் மஹிந்த அணி­யினர் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டனர். ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியால் வழங்­கப்­பட்ட தேசியப் பட்­டியல் பகிர்வு மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் நிய­மனம் உள்­ளிட்ட பல செயற்­பா­டு­களை கடு­மை­யாக எதிர்த்த மஹிந்த அணி­யினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் சிலவற்றுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.

இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் தேர்தலில் மஹிந்த அணியினர் புதிய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.