இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரால் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

Published By: Vishnu

04 Oct, 2022 | 09:17 PM
image

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்  மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) விசாரணை செய்யப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிமன்றம் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண இணக்கப்பாட்டுக்கு வருமாறு தெரிவித்தது.

தங்களின் பதவிக்காலத்தை ரத்து செய்யும் வகையில் வெளியிடப்பட்ட  அறிவிப்பில் திருத்தம் செய்தல்,  இந்த வழக்கை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்து தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வது, மற்றும் நிர்வாக குழுவை உருவாக்குவது என்பன இதில் அடங்கும்.

உச்சநீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 2021 தேர்தலின் கீழ் தெரிவான சம்மேளன தலைவரான ஜஸ்வர் உமர், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாளராக  ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

மேலும்,  விளையாட்டுத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில், கணக்காளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஒருவரும் இந்த நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்கள். 

எனவே, இந்த ஐந்து பேர் கொண்ட குழு தேர்தல் நடத்தப்படும் வரை அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிதி நிர்வாகத்திற்கான பணிகளைச் மேற்கொள்ளும். 

சம்மேளனத்தின் புதிய யாப்பை ஒரு வாரத்திற்குள் விளையாட்டு அமைச்சில் பதிவு செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்தப் பிரச்சினையை தீர்க்க  நேரத்தையும் வாய்ப்பையும் வழங்கியதற்காக  விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். 

தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க சரியான நேரத்தில் இந்த நடவடிக்கைகளை எடுத்த  நீதிமன்றத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தப் பிரச்சினையை பேசி  தீர்க்கவும், விரைவில் சம்மேளனத்தின் தேர்தலை நடத்தவும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதில்  நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58