ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Vishnu

04 Oct, 2022 | 09:12 PM
image

(எம்.நியூட்டன்)

சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது யார் என்பதை ஜனாதிபதியும் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்க வேண்டும் என வடபகுதி கடற்தொழிலாளர்  கோரிக்கை விடுத்துள்ளார்கள் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள்  கூட்டுறவு சங்கங்களின் சமாச சம்மேளதினத்தின்  பிரதிநிதிகள் யாழ் மாவட்ட கடற் தொழிளார்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் தொடர்பாக யாழ்  ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்

 அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்

வடக்கு கடல் பரப்பில் குறிப்பாக யாழ் மாவட்ட கடல் பரப்பில் சட்டவிரோத தொழில் முறைகளால் பாரம்பரிய முறையில் கடற்தொழில் செய்யும் கடல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் இந்தப் பாதிப்புகள் மட்டுமின்றி  கடலுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது நாங்கள் இதை எதிர்க்கின்றோம்.

கடல் அட்டை பண்ணை கடல் வளர்ப்பதற்கு ஏற்ற இடங்களில் இதனை செய்வதற்கு நாங்கள் எதிர்ப்பு அல்ல ஆனால் பாரம்பரியமான முறையில் கடை தொழில் செய்பவர்களுக்கு இடையூறாக கடல் போக்குவரத்துக்கு இடையூறாக கடல் பண்ணை அமைப்பது எதிர்க்கிறோம்.

மேலும் கடலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே நாம் கூறுகிறோம் ஆனால் இவற்றை கருத்தில் எடுக்காது கடல்அட்டை பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு எதிராக நாங்கள் பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தாலும் அது தொடர்பில் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.

கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் கடற் தொழில் அமைச்சர் என அனைத்து தரப்பினரிடமும் இக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் ஆனால் எவையும் இடம்பெற்றதாக இல்லை.

சட்டவிரோத கடத்தலில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் கைது செய்து கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இதனை கடற்படைசெய்வதில்லை கடற்தொழில் நீரியில் வளதிணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை  கடலில் சென்று கைது செய்ய முடியாது.

அவ்வாறு செய்வதாயின் அவர்களுக்கு படகு மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் இது சாத்தியப்படாத விடயமாகும் கடற் படையினர் சட்டவிரோத தொழிலை செய்பவர்களை கைது செய்யாதுவிடுவதற்கு அவர்கள் பணத்தை பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடல்வளத்தை பாதுகாத்தல் கடல்வளத்தை அபிவிருத்தி செய்வதற்கென பல துறைசார் நிறுவனங்கள் இருக்கும் போது அங்குள்ள அதிகாரிகள்  கடற்தொழிலாளர்களுக்கு ஒரு கருத்தையும் அமைச்சருக்கு ஒரு கருத்தையும் தெரிவி்க்கிறார்கள்.

இது எங்களை மோத விடுகிறார்கள் இந்த சச்சரவுகளுக்கு முடிவு கட்டுவதாயின்  சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு யாருக்கு அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டு்ம் என்றார்கள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53