மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் - அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்!

Published By: Vishnu

04 Oct, 2022 | 05:25 PM
image

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார். இவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் 03 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைக்ககூட மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.

நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

மயிலடுத்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.

இவர்களை மீண்டும்  அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம். தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.

இவ்விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள் அதனை மாவட்ட செயலாருக்கு வழங்க முடியும்.

சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட  5 ஹேக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் இணக்கமானவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22