வண்ணம் மின்னிலையங்களை விரைவாக அமைக்கவும் : மின்சாரசபை யிடம் கோரிக்கை

21 Nov, 2016 | 03:03 PM
image

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அனுமதியளிக்கப்பட்ட “குறை செலவிலான நீண்டகால மின் பிறப்பாக்கத் திட்டத்தில் (LCLTGEP)” குறிப்பிட்ட வண்ணம் மின்னிலையங்களை அமைப்பதில், தாமதம் ஏற்பட்டுக் கொண்டு உள்ளமையை, ஆணைக்குழுவானது இலங்கை மின்சாரசபையின் கவனத்திற்கு கொணர்ந்துள்ளது.

18ம் திகதி நவம்பர் அன்று இலங்கை மின்சாரசபைக்கு அனுப்பிய கடிதத்தில், கொண்டுசெல்கை உரிமதார் மேற் குறிப்பிட்ட திட்டத்திற்கான அனுமதியை உதாசீனம் செய்துள்ளதாகவும் 17 நவம்பர் 2016 அன்று அவ் உரிமதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு நடைமுறைப்படுத்தற் திட்டத்திலும் “குறை செலவிலான நீண்டகால மின் பிறப்பாக்கத் திட்டத்திலும் (LCLTGEP)” பாரிய விலகலை அவதானிப்பதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கடந்த 15 செப்டெம்பர் 2016 ம் திகதியன்று குறை செலவிலான நீண்டகால மின் பிறப்பாக்கத் திட்டத்திற்கு (LCLTGEP)” அனுமதி அளித்திருந்தது. எதிர்காலத்திற்கான மின்சாரத் தேவைப்பாடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதே இந்த அனுமதியளிப்பின் நோக்கம் ஆகும். அதற்கேற்ப 2017 – 2020ம் ஆண்டு காலப்பகுதிக்குரிய மின்னிலையங்கள் உடனடியாக கட்டப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆயினும், இலங்கை மின்சார சபையால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஆற்றப்பட்ட அண்மைய தொடர்பாடலில், அனுமதிக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதீத கால தாமதம் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

2017 - 2020ம் ஆண்டு காலப் பகுதிக்கான நெருக்கடி நிலையை எதிர்கொள்ளத் தேவையான மின்னிலையங்கள், திட்டமிட்டதிலிருந்து ஈராண்டுகளுக்கு  தாமதமாகின்றன. இதன் விளைவாக, நாடு மின் பற்றாக்குறை நெருக்கடியை எதிர் கொள்கையில் மின் தேவைப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.  

அதனால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கொண்டுசெல்கை நிபந்தனை மற்றும் பாரிய வழங்கல் உரிம இல EL/T/09-002 ( CEB) ஆகியவற்றின் கீழ், 

I. ஒவ்வொரு மின் நிலையங்களும் அனுமதிக்கப்பட்ட திட்டத்தில் இருந்து ஏற்பட்ட விலகலுக்கான காரணங்கள்

II. திட்டத்திலிருந்து விலகியதால் 2017 - 2020 காலப்பகுதியில் மின்சார நெருக்கடி நிலையில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து ஒரு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

III. திட்டத்திலிருந்து விலகியதால் 2017 - 2020 காலப்பகுதியில் தொடர்ச்சியான மின்சார வழங்கலில் தாக்கம் ஏற்படும் எனில், அந்த மின்சாரத் தேவைப்பாட்டினை எதிர்கொள்வதற்குத் தேவையான தீர்வுகள் / முன்மொழிவுகள் ஆகியவற்றை தர வேண்டும்.

IV. கொண்டுசெல்கை உரிமதாரர் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 24ம் பிரிவை மீறவில்லை என்பதற்கும் EL/T/09-002 எனும் இலக்கத்திற்குரிய மின் கொண்டுசெல்கை மற்றும் பாரிய வழங்கல் உரிமத்தின் 30ம் நிபந்தனையை மீறவில்லை என்பதற்கும் ஆணைக்குழுவிற்கு சான்றுகளை அளிக்க வேண்டும்.

போன்ற தகவல்களை வழங்குமாறு  வழிகாட்டலை வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38