மனித உரிமை பேரவை தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு போதுமான ஆதரவு கிடைக்காது - இலங்கை கருதுகின்றது

Published By: Rajeeban

03 Oct, 2022 | 11:30 AM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்  வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா கனடா ஜேர்மனி பிரித்தானியா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இலங்கை குறித்த தீhமானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.

புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முடியும் என தேவையற்ற நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த இந்த தீர்மானம் இலங்கையின் பொறுப்புக்கூறல் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

கடந்த வருட தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த பொறிமுறையை உருவாக்கியுள்ளது.

இந்த பொறிமுறை இயங்குவதற்கு மேலும் வளங்களை வழங்குமாறு புதிய தீர்மானம் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கான ஆதரவை 47 நாடுகளிடமிருந்து பெற முடியாது  என இலங்கை கருதுவதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலங்களில் வாக்களித்துவந்துள்ள பங்களாதேஸ் ரஸ்யா போன்ற நாடுகள் இம்முறை மனித உரிமை பேரவையில் உறுப்புரிமை பெறவில்லை .

இந்தியா இம்முறையும் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது,பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக நேபாளமும் வாக்கெடுப்பை தவிர்க்கும்.

வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

தீர்மானத்தை கொண்டுவருபவர்களிற்கு ஆதரவு கிடைக்கும் இந்த யதார்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56