ஒரு சதம் கூட கட்டணம் பெறாமல் எனக்காக ஆஜரானவர் கெளரி என மனம் திறந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி

Published By: Digital Desk 3

03 Oct, 2022 | 11:12 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

'ஒரு பொலிஸ் அதிகாரி என்ற ரீதியில் நான் நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்துள்ளேன். ஆனால் நான் கைது செய்யப்பட்ட போதே அதன் தாக்க நிலைமையை என்னால் உணர முடிந்தது. அவ்வாறான நிலையில்,  எனக்கிருந்த நிதிப் பிரச்சினை அனைத்தையும் தாண்டி, ஒரு சதம் கூட பெற்றுக்கொள்ளாமல் எனக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க போராடியவரே அமரர் கெளரி சங்கரி தவராசா' என  சி.ஐ.டி.யின்  முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற  சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின்  முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது. 

இதில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர இதனை வெளிப்படுத்தினார்.
இதன்போது ஷானி அபேசேகர மேலும் தெரிவித்ததாவது,
'1989 ஆம் ஆண்டு நான் சி.ஐ.டி.யில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது கெளரி சங்கரி தவராசாவின் அறிமுகம் கிடைத்தது.  அது முதல்   நான் அவரை நன்கு அறிவேன். எனினும் ஒரு போதும் அவர் எனது கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்ததே இல்லை.

நான் கைது செய்யப்பட்ட போது,  எனது  மகளே  நிதி விடயங்களை கையாண்டார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவர்தனவின் அறிவித்தல் பிரகாரம் எனது மகள் கெளரி சங்கரி தவராசாவை சந்தித்திருந்தார்.

அதன் பின்னர் எனக்கு பிணை கிடைக்கும் வரையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிணை மனுக்கள்  என அனைத்தையும் ஒரு சதம் கூட பெறாமல்  தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா. எனது பிணை பல காரணங்களால் பல தடைவைகள் நிராகரிக்க்ப்பட்டன.  

அப்போதெல்லாம், எனது மகளிடம் ' ஒன்றும் யோசிக்க வேண்டாம்... அடுத்த தவணையில் பிணை கிடைக்கும் ..' என எனது குடும்பத்தாரையும் ஆறுதல் படுத்தியவர் அவர்.

பிணை கிடைத்ததும் நான் அவரை சந்தித்தேன். குறைந்த பட்சம் வழக்கு ஆவணங்களை பிரதி செய்யும் போது ஏற்படும் செலவினையேனும் பெற்றுக்கொள்ளுமாறு கோரினார். அவர்  அதனைக் கூட ஏற்க மறுத்திவிட்டார். ' உங்களிடம் நான் கட்டணம் பெற்றால், அந்த பாவத்தை நான் எப்படி நிவர்த்திப்பேன் ' எனக் கேட்டவாறே அவர் அதனை நிராகரித்துவிட்டார்.

இன்றைய சூழலில்,  கெளரி தவராசாவின்  மிக அதிகளவில் உணரப்படுகின்றது.   கெளரி தவராசாவைப் போன்ற நூற்றுக்கணக்கானக்கானவர்கள் இன்று  நாட்டுக்கு தேவைப்படுகின்றார்கள். ' என  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58