போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய படைப்பிரிவு - நீதி அமைச்சர்

Published By: Digital Desk 5

02 Oct, 2022 | 07:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

போதைப்பொருள் கடத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக புதிய  படைப்பிரிவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இளைஞர் சமூகத்தை நச்சுத்தன்ம உள்ள போதைப்பொருள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்காக எடுக்கவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்டமா திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டடிருந்த இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்கள் பாரியளவில் அதிகரித்து செல்கின்றது. இதனை கட்டுப்பத்துவதற்காக, போதைப்பொருள் விநியோகித்தல், விற்பனை செய்தால் மற்றும் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய படைப்பிரிவொன்றை அமைக்க இருக்கின்றோம்.

அதேபோன்று இளம் சமூகத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக செல்வதை தடுப்பதை நோக்காகக்கொண்டு தயாரிக்கப்படும் தேசிய கொள்கைக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

அத்துடன் நாட்டின் இளம் சமூகத்தினர் மத்தியில் அபாயகர ஒளடத பயன்பாடு வேகமாக பரவி வருகின்றது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் பெரும்பாளானவர்கள 20, 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாகும்.

இந்த நிலைமையை விரைவாக கட்டுப்பத்தாவிட்டால், எதிர்வரும் சில வருடங்களுக்குள் இலங்கையில் இளம் பிரவினரில் அதிகமானவர்களின் சுகாதார நிலைமை மோசமடைந்து குடும்ப வாழ்க்கை சீரழிந்து, ஒழுக்கமற்ற சமூகவிராேத செயல்களுக்கு பெருமளவில் ஈடுபடும் சமூக சூழல் உருவாகும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் போதைப்பொருள் பயன்படுத்தியமை காரணமாக சிறைப்படுத்தப்படும் நபர்கள் புனர்வாழ்வு மற்றும் சமூக சீர் திருத்த செயற்பாடுகளின்பால் அனுப்புவது தொடர்பாக கூடிய அவதானம் செலுத்தவேண்டி இருப்பதுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்போம்.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் தற்போது அபாயகர ஒளடத பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் தேசிய கொள்கை தயாரிக்கும்போது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை அறிவுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையினால் பாடசாலை மாணவர்களை அறிவுறுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தை செயற்படுத்துவதற்காக கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட பிரிவினர் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11