தன்னார்வ சுற்றுலா பயணத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை அரங்கு 

Published By: Nanthini

01 Oct, 2022 | 09:40 PM
image

'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' (பீஸ்) அமைப்பின் ஏற்பாட்டில் “தன்னார்வ சுற்றுலா பயணத்தில் சிறுவர் பாதுகாப்பு” எனும் தலைப்பில் தேசிய ஆலோசனை அரங்கு கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஹோட்டல் மிராஜில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இவ்வாலோசனை அரங்கு, “தன்னார்வ சுற்றுலா பயணம் பற்றியும், அதன் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் நிலையான சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் சிறுவர்களை பாதுகாப்பதன் அவசியம்" பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பில் தொழில் புரியும் பங்குதாரர்களுக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய 'தேசிய நெறிமுறை ஒழுக்கவியல் கோவை' ஒன்றை உருவாக்கவும் இந்நிகழ்வு பங்களிப்பு செய்தது. 

தன்னார்வ சுற்றுலா பயணம் என்பது தன்னார்வ தொண்டையும் சுற்றுலா பயணத்தையும் ஒன்றிணைத்த ஓர் அம்சமாகும். இது சுற்றுலா பயணிகளின் மொத்த விடுமுறையிலோ அல்லது பயணத்தில் ஒரு பகுதியாக காணப்படும் தன்னார்வ பணி என விவரிக்கப்படுகிறது. அத்தோடு இது சுற்றுலா பயணிகளுக்கு அனுபவமளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதோடு, இதில் அவர்களால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான நன்மைகள் அல்லது தீங்குகள் பற்றி ஏதும் கருத்திற்கொள்ளப்படவில்லை. 

'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' (பீஸ்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. மொஹமட் மஹுறுப் அவர்கள் "தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனாதை இல்லங்கள், தன்னார்வ சுற்றுலா பயணம் மற்றும் சிறுவர் பாலியல் சுரண்டல் ஆகியவை குறித்து நடாத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனாதை இல்லங்களிலும், அந்நிறுவன அடிப்படையிலும் பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வருகின்றமை தெரியவந்துள்ளது” என்றார். 

மேலும் அவர், “அனாதை இல்லங்களுக்குள்ளும் அல்லது அனாதை இல்லங்களாலும் வசதிப்படுத்தப்படுகின்ற சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் வழிவகுக்கும் நடவடிக்கைகள் பற்றி இவ்வாய்வு சுருக்கமாக கூறுகின்றது” என்றும் குறிப்பிட்டார். 

SOS சிறுவர் கிராமத்தின் கல்விப் பணிப்பாளர் திரு. டினுஷ் ஜயசூரிய, தன்னார்வ சுற்றுலா பயணம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பில் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் அவர், சிறுவர்களுக்கு தன்னார்வச் சுற்றுலா பயணம் மூலம் கிடைக்கும் பயன்களை உறுதி செய்யும் அதேவேளை அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கும் வகையில் நிறுவனங்கள் பின்பற்றக்கூடிய நல்ல நடைமுறைகள் பற்றியும் விளக்கினார். “தன்னார்வ தொண்டர்கள் பல்வேறுபட்ட வழிகளில் உதவுவதற்கு முன்வருவார்கள். சிலவேளை தன்னார்வ தொண்டு குறித்து உரையாடும்போது அவர்கள் ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக்கொண்டு வருவார்கள். குறித்த இடத்துக்கு வந்த பிறகு அவர்கள் செயற்படும் விதம் முற்றிலும் வேறொன்றாக அமைவதை காணக்கூடியவாறு உள்ளது” என்றும் கூறினார். 

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் திருமதி. தனுஜா திஸ்ஸநாயக்க தனது கருத்துக்களை தற்போதைய சூழலுக்கு உகந்த வகையில் எடுத்துக்காட்டினார். குறிப்பாக, சுற்றுலாத் துறையில் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தமது திணைக்களம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றியும் மேற்கொள்ளவிருக்கும் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக தெரிவித்தார். 

“இங்கு கூடியிருக்கும் பலரோடு பேசும்போது, எம்மோடு இணைந்து வேலை செய்ய பல நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை நான் இன்று தெரிந்துகொண்டேன். அதனால், அவர்களின் ஒத்துழைப்புடன் எம்மால் கடினமான வேலைகளையும் கூட செய்து கொள்ள முடியும்” என்று பிரதி பொலிஸ் மா அதிபர் திருமதி. ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார். 

மேலும், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கடமைகள் பற்றியும் காவல்துறை எடுக்கும் முயற்சிகளில் பொதுமக்கள் எவ்வாறு ஈடுபட முடியும் என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். அத்தோடு, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான தற்போதைய சட்ட சூழல் பற்றிய பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துகொண்டார். 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் (சட்டம்), திருமதி பிரீதிக்கா சகலசூரிய, சுற்றுலா துறையிலும் தன்னார்வ சுற்றுலா பயணத்திலும் பயன்படத்தக்க சட்டங்கள் பற்றிய வலுவான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அத்தோடு, குறிப்பிட்ட சில சிறுவர் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் சம்பவங்களை கையாளும்போது சில சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றியும் தெளிவூட்டினார். 

“எமக்கு கிடைத்த பல புகார்களில் தமக்கு நடந்தது துஷ்பிரயோகம் தான் என்பது கூட அறியாமல் பல சிறுவர்கள் இருக்கின்றனர்” என்றும் தெரிவித்தார். 

எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் (பீஸ்) அமைப்பின் சிரேஷ்ட திட்ட அலுவலர் திரு சஹான் வீரதுங்க, “The Code” (ஒழுக்கவியல் கோவை) என்று அழைக்கப்படும் தன்னார்வ சுற்றுலா பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி பகிர்ந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், சிறந்த மற்றும் நெறிமுறை ஒழுக்கவியல் கோவையில் காணப்படவேண்டிய பண்புகள் பற்றியும் சுற்றுலாத்துறையில் உள்ள சேவை வழங்குநர்கள் சர்வதேச நடத்தை விதிகளில் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  

பங்குபற்றுநர்கள் பகிர்ந்துகொண்ட ஆழமான தகவல்களை தொகுத்து, அவற்றை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று கலந்துரையாடப்பட்டது. இதில் பங்குபற்றுநர்கள், தன்னார்வ சுற்றுலா பயணம் தொடர்பான பொருத்தமான கொள்கைகளை வகுப்பதற்கும், ஆலோசனை அரங்கின் மூலம் வெளிவந்த பரிந்துரைகளின்படி செயல்படவும்  'செயற்பாட்டு குழு' ஒன்றை நிறுவினார்கள். இதில் அரசு, சிவில் சமூகம், சட்ட அமுலாக்க நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்த பிரதிநிதிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இந்நிகழ்வில் பல்வேறுபட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 67 பேர் கலந்து சிறப்பித்தனர். 

அரச சார்பற்ற நிறுவனமான 'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' (பீஸ்) அமைப்பு, 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது தேசியளவிலான ஆலோசனை அரங்கை ஏற்பாடு செய்வதற்கு வித்திட்டது. எல்லா வகையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதே பீஸ் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56