100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிக்க இந்தியா தீர்மானம்

Published By: Digital Desk 3

01 Oct, 2022 | 12:41 PM
image

(டெல்லியிலிருந்து எம். மனோசித்ரா)

இலங்கையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அனுமதி கோரியுள்ளதாக  டெல்லியில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்  தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சுமார் 211  இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. 

இந்த விநியோக கட்டமைப்பை மேலும் விஸ்தரிக்கும் முகமாகவே புதிய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளது.  

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழு நேற்று டெல்லியில்  அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தது. இதன் போது கலந்துரையாடுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெளிவுப்படுத்திய இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் (வர்த்தகம்) சுதீப் ஜெயந்த் மேலும் கூறுகையில்,

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பொருளாதார நெருக்கடியினால்  ஏற்பட்ட எரிபொருள் தேவையை ஈடுச் செய்வதற்கு சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் 7 மில்லியன் மெட்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியிருந்தோம். 

இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற எரிபொருளினால் கூடுதல் வருமானங்கள் கிடைப்பதில்லை. எவ்வாறாயினும் இந்திய அரசின் அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டின் கீழ் இலங்கைக்கு டெல்லி முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்ற நிலையில் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனமும் அவசர நிலைமையில் இலங்கைக்கு உதவுகின்றது.

எவ்வாறாயினும்  இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனத்துடன் இணைந்து எதிர்பொருள் விநியோக கட்டமைப்பு தவிர்ந்து வேறு துறைகளிலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். 

குறிப்பாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) துறையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58