இலங்கை கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுகம்

Published By: Priyatharshan

01 Oct, 2022 | 10:37 AM
image

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ கிரிக்கெட் ஜெர்சியை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான மாஸ் ஹோல்டிங்ஸ் ( MAS Holdings ) இந்த இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ கிரிக்கெட் ஜெர்சியை வடிவமைத்திருந்தது.

இந்நிகழ்வில் மாஸ் ஹோல்டிங்ஸ் ( MAS Holdings ) நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமலியன் மற்றும் அந் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி செலான் குணதிலக்க ஆகியோரால் இலங்கை இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோரிடம் ஜெர்சி உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜெர்சியை வடிவமைத்து உற்பத்தி செய்த MAS Active நிறுவனமான கட்டுநாயக்க Nirmaana – MAS Active இல் நடைபெற்றது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட்டுடன் உடன் நம்பகமான உறவை மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது பேணி வருகிறது.

வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடை, வசதி மற்றும் செயற்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், தேசிய கிரிக்கெட் அணிக்காக உலகத்தரம் வாய்ந்த செயல்திறன் ஆடைகளை வடிவமைத்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இம்முறை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வியர்வை காரணமாக உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆடைகளுடன் விளையாடுவது கடினம் என இலங்கை அணி வீரர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் அதற்கேற்ற வகையில் இம்முறை ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜெர்சியை, ஒக்டோபர் மாதங்களில் அதிக ஈரப்பதம் கொண்ட அவுஸ்திரேலிய மைதானங்களின் சுற்றுச்சூழல் நிலைமைகளை மதிப்பீடு செய்து, வானிலை மாற்றங்கள்,  வெப்பநிலை மற்றும் மனித உடலின் வியர்வை சுரப்பிகள் ஆகியவற்றை ஆராய்ந்த பின் MAS Active குழுவால் வடிவமைக்கப்பட்டது.

இந்த ஜெர்சியின் துணியானது காற்றோட்டம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டதுடன் விளையாட்டு வீரரின் புத்துணர்ச்சி மற்றும் வசதிக்காக வியர்வையை விரைவாக ஆவியாக்குகிறது.

இது இலகுரக, அதிக உறிஞ்சக்கூடிய, நீட்டக்கூடிய துணிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போதுள்ள மற்றும் ஈரப்பத மேலாண்மை தொழில்நுட்பத்துடன் கூடுதலாக வசதியை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, இலங்கையின் கடற்ரைகளில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சியின் அவசியம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த MAS SLC ஜெர்சியை உருவாக்கியுள்ளது. 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவாக வீசப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்யப்பட்ட ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஜெர்சிகளை MAS தயாரித்தது.

இந்த ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்சியில் காடழிப்பு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இலங்கை போன்ற தீவு நாடுகள் கடல் மட்டம் அதிகரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வானிலை போன்ற புவி வெப்பமடைதலின் விளைவுகளுக்கு எவ்வாறு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22