களனிவெலி புகையிரத பாதையில், குறுக்கு பாதையின் அருகாமையில் கார் ஒன்று புகையிரத பஸ் உடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் போது பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்து, ஹொமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர் சேவையில் இல்லாமையினாலே குறித்த விபத்து நிகழ்ந்ததாக அப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.