ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் நடவடிக்கை - ஐக்கிய தேசிய கட்சி

Published By: Digital Desk 3

29 Sep, 2022 | 09:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வரத்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அதனால் ஜனாதிபதி நாடு திரும்பியதும் வர்த்தாமானி அறிவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பார் என ஜனாதிபதியின் தொழில் பணிப்பாளர் பணிப்பாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தாெடர்ந்து தெரிவிக்கையில்,

அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அரச ரகசியங்கள் சட்டத்தின் கீழே இந்த வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு விடுக்கும்போது ஒரு பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முடியாது. அது தவறு.  நிறுவனங்களை இந்த சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முடியும். 

குறிப்பாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பாதுகாப்பு அமைச்சு என ஒரு இடத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி இருந்தால் அது சரி.

என்றாலும் தற்போது ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டே உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு வர்த்தமானி வெளியிடுவதாக இருந்தால் அவசரகால சட்டத்தின் கீழே மேற்கொள்ள முடியும். அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி, இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அப்போது இது சட்ட ரீதியிலானதாகும். ஆனால் நாட்டில் தற்போது அவசரகால சட்டம் அமுலில் இல்லை.

அதனால் அதி உயர் பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். 

எனவே ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை, நாடு திரும்பியதும் அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக மீள் பரிசீலனை மேற்கொள்வார். அல்லது வர்த்தமானி அறிவிப்பில் இருக்கும் பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17