பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான் தகுந்த பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி

Published By: Vishnu

29 Sep, 2022 | 04:28 PM
image

டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆற்றிய பணிகளை அடிப்படையாகக் கொண்டு, 'உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா-ஜப்பான் உறவுகள் தகுந்த பங்கை வகித்துள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். அபே இந்தியா மற்றும் ஜப்பான் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாகவும், அவற்றை பல புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தியதாகவும் பிரதமர் மோடி  பிரதமர் கிஷிடாவிடம் கூறினார்.

துக்க நேரத்தில் இன்று சந்திக்கிறோம். இன்று ஜப்பானுக்கு வந்த பிறகு, எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் நான் கடந்த முறை வந்தபோது, அபே சானுடன் நான் மிக நீண்ட நேரம் உரையாடினேன். வெளியேறிய பிறகு, இதுபோன்ற ஒரு செய்தியைக் கேட்க நேரிடும்  என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என பிரதமர் இதன் போது குறிப்பிட்டார். அபே செய்த அனைத்து நல்ல பணிகளையும் இந்திய மக்கள் நினைவுகூருகிறார்கள் என்று மோடி மேலும் கூறினார்.

இரு நாடுகளின் பகிரப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் அவர்களின் நட்பு முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறினார். சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பார்வையை கருத்தியல் செய்வதில் அபேயின் பங்களிப்புகளையும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் தலைமையின் கீழ், இந்தியா-ஜப்பான் உறவுகள் மேலும் ஆழமடையும், மேலும் உயரும் என்று நான் நம்புகிறேன். உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் பொருத்தமான பங்கை வகிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிவதாக பிரதமர் மோடி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10