இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)

20 Nov, 2016 | 02:36 PM
image

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 பேர் பலியானதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா மூன்றரை இலட்சம் மற்றும் படுகாயமைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த சுரேஷ் பிரபு கான்பூர் நகருக்கு விரைந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். 

மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தகோர விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக்-குக்கு ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜி அனுப்பியுள்ள அனுதாப செய்தியில் 

‘கான்பூர் அருகே இன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ்  ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் வரும் செய்திகளை அறிந்து கவலை அடைந்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவியுங்கள் என ஆளுனர் ராம் நாயக்கை கேட்டுக் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இவ்விபத்து தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘பாட்னா-இந்தூர்  ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியான செய்தியை அறிந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17