மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

Published By: Digital Desk 3

29 Sep, 2022 | 12:26 PM
image

ரொபட் அன்டனி

பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யிலும் நாட்டின் அர­சியல் களம் சூடு பிடித்துக் கொண்டே செல்­கி­றது. அர­சியல் ரீதி­யான காய் நகர்­வுகள், அர­சியல் வியூகம் அமைக்கும் முயற்­சிகள், முகாம் அமைக்கும் செயற்­பா­டுகள், அடுத்த தேர்­தலை நோக்­கிய கூட்­ட­ணிகள் என்­பன வலு­வாக அர­சியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்­டி­ருப்­பதை காண முடி­கி­றது.

இலங்­கையில் எப்­போதும் அர­சியல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருக்­கின்­றமை வழ­மை­யா­கி­விட்­டது. இலங்கை மட்­டு­மன்றி தெற்­கா­சிய நாடு­க­ளி­லேயே இவ்­வாறு அர­சியல் களம் எப்­போதும் சூடாக இருப்­பதே பொது­வான பண்­பாக இருக்­கின்­றது. அந்­த­ள­வுக்கு அர­சி­யலில் மக்கள் ஆர்வம் செலுத்­து­வதும் ஏதோ ஒரு வகையில் கூட்­டணி அமைத்து அர­சியல் அதி­கா­ரத்தை கைப்­பற்றுவதிலும் அர­சி­யல்­வா­தி­களின் ஆர்­வமும் மேலோங்கி காணப்­ப­டு­கின்­றன.  

தற்­போது இந்த பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக ஏற்­பட்ட போராட்­டங்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களின் விளை­வாக குறிப்­பிட்­ட­ளவில் நாட்டில் ஆட்சி மாற்­றமும் ஏற்­பட்­டது என்­பதை மறுக்க முடி­யாது.  ஜனா­தி­பதி பத­வியில் மாற்றம், பிர­தமர் பத­வியில் மாற்றம் என மிகப்­பெ­ரி­ய­தொரு மாற்றம் நாட்டில் நிகழ்ந்­தி­ருக்­கி­றது.  

இந்­நி­லையில் பொது­ஜன பெர­முன கூட்­டணி பல பிரி­வு­க­ளாக பிள­வுபட்டு காணப்­ப­டு­கி­றது என்­பதே யதார்த்­த­மாக இருக்­கின்­றது. பொது­ஜன பெர­முன கூட்­ட­ணியில் இருந்து பல தரப்­புகள் பிரிந்து செயல்­ப­டு­கின்­றன. 

பொது­ஜன பெர­மு­னவில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பிரிந்து தனித்து செயல்­ப­டு­கி­றது. ஆனால் சுதந்­திர கட்­சியில் இருக்­கின்ற ஒரு சில உறுப்­பி­னர்கள் தற்­போது அர­சாங்­கத்­துடன் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றனர். அதே­போன்று டலஸ் மற்றும் ஜி.எல்.பீரிஸ் தலை­மை­யி­லான 13 பேரைக் கொண்ட கூட்­டணி தனித்து செயற்ப­டு­கி­றது. 

விமல் வீர­வன்ச உள்­ளிட்டோர் தலை­மை­யி­லான கட்­சிகள் தனி கட்­சியை ஆரம்­பித்து சுயா­தீ­ன­மாக செயற்­பட்டு வரு­கின்­றன. சந்­திம வீரக்­கொடி மற்றும் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அணி­யி­னரும் சுயாதீ­ன­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இது தவிர எஞ்­சிய ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்தை நடத்­தி­வ­ரு­கின்­றது. மேலும் எதிர்க்­கட்­சிகள் மத்­தி­யிலும் பல நகர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஐக்­கிய மக்கள் சக்­தி­யிலும் ஒரு சிலர் அர­சாங்­கத்தில் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றனர். கட்­சி­களின் தலை­மைத்­து­வங்கள் தொடர்ச்­சி­யாக சவால்­களை சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இந்தப் பின்­ன­ணியில் கடந்த திங்­கட்­கி­ழமை நாட்டில் இடம்பெற்ற ஒரு  நிகழ்வு  அர­சியல் ரீதியில் தீர்க்­க­மா­ன­தாக அமைந்­துள்­ளது. உண்­மையில் அதனை அர­சியல் நிகழ்வு என்று கூற முடி­யாது.  அது முன்னாள் பிர­த­மரின் நினை­வு­தின வைப­வ­மாகும்.  ஆனால் அது ஒரு அர­சியல் வியூகம் சார்ந்த நிகழ்­வாக தோற்­ற­ம­ளித்­தது. அந்த நிகழ்வில்  அர­சியல் ரீதி­யான நகர்­வு­க­ளுக்­கான சமிக்­ஞையை வெளிப்­ப­டை­யாக  காண முடிந்­தது.    

மறைந்த முன்னாள் பிர­தமர் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­கவின் 63 ஆவது நினை­வு­தினம் கடந்த திங்­கட்­கி­ழமை ஹொர­கொல்­லவில் அமைந்­துள்ள அன்­னாரின் நினை­வி­டத்தில் நடை­பெற்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் பிர­தமர் தினேஷ் குண­வர்த்­தன, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள், பொது­ஜன பெர­மு­னவின் அதி­ருப்­தி­யா­ளர்கள் எனப் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை ஆச்­ச­ரி­ய­ம­ளிப்­ப­தாக அமைந்­தது. 

அர­சியல் ரீதி­யிலும் அது முக்­கி­யத்­து­வ­மிக்­க­தா­கவும்  அவ­தா­னி­களின் புரு­வங்­களை உயர்த்­து­வ­தா­கவும் அந்த நிகழ்வு நடந்­தே­றி­யது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான துமிந்த திஸா­நா­யக்க மற்றும் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து அர­சாங்­கத்­துடன் இணைந்து கொண்­டுள்ள இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஜகத் புஷ்­ப­கு­மார, லசந்த அழ­கி­ய­வண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உள்­ளிட்ட பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமா­ர­வெல்­கம, பொது­ஜன பெர­மு­னவில் இருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­படும் அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சந்­திம வீரக்­கொடி, உள்­ளிட்ட பலரும் இந்த நினைவு நிகழ்வில் பங்­கெ­டுத்­தி­ருந்­தனர். முன்னாள் சபா­நா­ய­கரும் சமூக நீதிக்­கான அமைப்பின் தலை­வ­ரு­மான கரு ஜய­சூ­ரி­யரும் நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்தார்.  அதில்  அரு­க­ருகே அமர்ந்­தி­ருந்த பிர­தமர் தினேஷ் மற்றும் முன்னாள் சபா­நா­யகர்   கரு ஜய­சூ­ரிய ஆகியோர்  நீண்­ட­நேரம்  கலந்­து­ரை­யா­டி­ய­மையும்  சக­ல­ரது அவ­தா­னத்­தையும் ஈர்த்­தது.  

அந்­த­வ­கையில் நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழல்,  பிர­தான பத­வி­களில் ஏற்­பட்ட மாற்­றங்கள் என்­ப­னவே  இந்த நிகழ்வில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கிய பிர­தி­நி­திகள், பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பி­னர்கள்,  பொது­ஜன பெர­மு­னவில் இருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­படும் தரப்­பினர் என பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­மையே இதனை பேசு பொரு­ளாக மாற்­றி­யுள்­ளது.  

இது   அர­சியல் களத்தில் ஆச்­ச­ரி­ய­மூட்­டு­கின்ற பல்­வேறு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒரு நகர்­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதா­வது மீண்டும் அர­சியல் களத்தில் சந்­தி­ரிகா இறங்­கி­விட்­டாரா? ஏதோ ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றாரா என்ற கேள்­வி­களும் தற்­போது பர­வ­லாக எழுப்­பப்­ப­டு­வ­துடன் பல வாதப்பிர­தி­வா­தங்­களும் இந்த விட­யத்தில் இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

மிக முக்­கி­ய­மாக பிர­தமர் தினேஷ் குண­வர்த்­தன இந்த நிகழ்வில் பங்­கேற்­றமை அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­ப­டு­கி­றது அவர் பொது­ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்­கா­வி­டினும் கூட ராஜ­பக் ஷ குடும்­பத்தின் மிக முக்­கி­ய­மான நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ரா­கவே காணப்­ப­டு­கிறார். கடந்த காலங்­களில் பல கட்­சிகள் பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்து விலகி ராஜ­பக் ஷ குடும்­பத்தை கடு­மை­யாக விமர்­சித்த போதும் கூட தினேஷ் குண­வர்த்­தனடன் இருந்தார். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­பதி ஆகி­ய­வுடன் தினே­ஷுக்கு பிர­தமர் பதவி கிடைத்­தது.

 இப்­போது அவர் இந்த சந்­தி­ரிகா குமார துங்­கவின் தந்­தையார் பண்­டா­ர­நா­யக்­கவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்­டி­ருக்­கின்­றமை அர­சியல் களத்தில் பல கேள்­வி­களை எழுப்பி இருக்­கின்­றது. பல கேள்­வி­களை இந்த பங்­கேற்பு எழுப்பி இருக்­கி­றது. அதா­வது மீண்டும் அர­சியல் களத்தில் இறங்கி ஒரு விளை­யாட்டை சந்­தி­ரிகா ஆரம்­பிக்க போகி­றாரா என்ற ஒரு வாதமும் தற்­போது ஏற்­ப­டு­வ­தற்­கான சூழலை இது ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்­றதன் பின்னர் சுமார் 10 வரு­டங்கள்  அர­சி­யலில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும் 2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு பிர­தான வகி­பா­கத்தை சந்­தி­ரிகா வகித்­தி­ருந்தார். அத்­துடன் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­யுடன் மிகக்குறைந்­த­ளவில்  அர­சி­யலில் ஈடு­பட்ட சந்­தி­ரிகா ஒதுங்­கியி­ருந்தார். எனினும்  மீண்டும் தற்­போது   களத்தில் இறங்கி இருக்­கின்றார் என்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அதன் ஒரு வெளிப்­பா­டா­கவே மிக முக்­கி­ய­மான அர­சியல் பிர­தி­நி­திகள் பண்­டா­ர­நா­யக்­கவின் நினைவு  நிகழ்வில் பங்­கேற்­றுள்­ளனர். பண்­டா­ர­நா­யக்­கவின் இந்த நினைவு நிகழ்­வு­களில் கடந்த காலங்­களில் முக்­கிய அர­சியல் பிர­மு­கர்கள் பங்­கேற்­பதை ஊட­கங்­களில் காணக்கிடைக்­க­வில்லை.  ஒரு­வேளை அழைப்­புகள் விடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம். அழைக்­கப்­பட்­ட­வர்கள் வராமல் இருந்­தி­ருக்­கலாம். அதனால் காண முடி­யாது போயி­ருக்­கலாம்.

ஆனால் தற்­போ­தைய  அர­சியல் சூழ்­நி­லையை கொண்டு ஒரு­வேளை அழைக்­கப்­பட்ட சக­லரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கலாம் என்ற ஊகமும் வெளிப்படுத்தப்படுகிறது. எப்படி இருப்பினும் அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு சில நடவடிக்கைகள், கூட்டணி, அரசியல் கூட்டுகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவே தெரிகிறது.

குறிப்பாக சந்திரிகா, குமார வெல்கம,   சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் பொதுஜன பெரமுனவிலிருந்து  விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற அனுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் சந்திம வீரக்கொடி    உள்ளிட்டோர் ஒரு அரசியல் முகாமாக அடுத்த தேர்தலில் உருவாகப் போகின்றனர் என்ற ஒரு அரசியல் தோற்றப்பாடும் தெரிகிறது.  

நாட்டின்  அரசியல் கள நிலைமைகள் மாற்றமடைந்துள்ள நிலையில்    சந்திரிகா குமாரதுங்க  அரசியல் களத்தில் மீண்டும் இறங்கிவிட்டார்  அல்லது இறங்க போகிறார்  என்பது இன்று அரசியல் களத்தில்  பேசு பொருளாகவே மாறி இருக்கிறது. இந்நிலையில்  இந்த தரப்பினரின்  அடுத்த கட்ட நகர்வுகளிலேயே  அடுத்து  என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54