கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு - குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின் பிணையில் விடுவிப்பு

Published By: Digital Desk 5

28 Sep, 2022 | 10:58 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஊடகத் துறை அமைச்சரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல, அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, கொழும்பு  மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், அது குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் புதன்கிழமை (28) அவ்விரு பிரதிவாதிகளுக்க்ம் கையளிக்கப்பட்டன.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டது.

 கடந்த 2011 ஒக்டோபர் 13 ஆம் திகதி அல்லது அதனை அன்மித்த தினமொன்றில், அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான

 2 இலட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபா 45 சதத்தினை, தனது  தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி  கட்டணத்தைச் எலுத்துவதர்கான கூட்டுத்தாபன தலைவருக்கு அழுத்தம் கொடுத்தமை,  அதன் பிரகாரம் குறித்த கட்டணம்ச் எலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த  வழக்கு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இஒருவருக்கும் எதிராக தொடரப்ப்ட்டுள்ளது.

 இந் நிலையில் குற்றப் பத்திரிகை கையலிக்கப்ப்ட்ட பின்னர்,  அமைச்சர் கெஹலியவும் மர்றைய சந்தேக நபரும் 30 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து, வழக்கை எதிர்வரும்  நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.

முன்னதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் கடந்த 2017 ஜூலை 13 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் ஜயம்பதி பண்டார ஹீன் கெந்தவுக்கும் எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்ப்ட்டது. மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் 17 சாட்சிகள், 10 வழக்குப் பொருட்களின் அடிப்படையில்  கெஹெலியவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல்ச் செய்யப்பட்டுள்ளது. இதனைவிட அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டாரவுக்கு எதிராக மேலும் 14 வழக்குகள்  தனியாகவும் தககல் செய்யப்பட்டன.

 கடந்த 2010.05.25 முதல் 2014.ஜூன் மாதம் வரை குன்டசாலை பகுதியைச் சேர்ந்த ஜயம்பதி பண்டா ஹீன் கெந்த அரச அச்சகக் கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார். இதன் போது 2010.11.22 முதல் ஊடகத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல கடமையாற்றியுள்ளார்.  அமைச்சருக்கு இதன் போது 40 ஆயிரம் ரூபா தொலைபேசி கட்டனம் செலுத்த சட்ட ரீதியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

 இந் நிலையில் 2012.03.15 முதல் 2012.04.14 வரையினால் காலப்பகுதிக்குரிய கெஹெலியவின் தொலைபேசிக் கட்டணமானது அந்த தொகையைவிட அதிகமாக இருந்துள்ளது. அதன்படி அந்த தொலைபேசி கட்டணமான 2 இலட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபா 45 சதத்தினை  அச்சகம் கூட்டுத்தாபணம் ஊடாக செலுத்தப்ப்ட்டுள்ளது. 

அச்சக கூட்டுத்தாபண தலைவரின் உத்தர்வுக்கு அமைய  பிரதி முகாமையாளர் ஒருவர் இதனைச் செலுத்தியுள்ளார்.  அதன்படியே கெஹலிய மற்றும் முன்னாள் அச்சக கூட்டுத்தாபன தலைவருக்கு எதிராக வழக்குத் தககல்ச் செய்யப்பட்டிருந்தது.

 இதனைவிட அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டாரவுக்கு மட்டும் எதிராக 7 கோடியே 34 இலட்சத்து 3 ஆயிரத்து 430 ரூபா வரையில் மோசடி செய்தமை தொடர்பில் 14 வழக்குகள் தனித்தனியாக தாக்கல்ச் செய்யப்ப்ட்டிருந்தன.

இந்த வழக்குகள் இலஞ்ச ஊழல் ஆணைக் குழ்வின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் ஆணைக் குழுவின் அனுமதியின்றியே தொடரப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் கெஹெலிய சார்பில் மேல் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த மேல் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தாக்ல் செய்திருந்த  குற்றச்சாட்டில்  சந்தேகநபர்களான கெஹலிய றம்புக்வெல்ல மற்றும் ஜயந்த ஶ்ரீ பண்டார ஹீன்கெந்த உள்ளிட்டோரை விடுவித்து, தமது தீர்ப்பை கொழும்பு பிரதான நீதிவானுக்கு அனுப்பியிருந்தது. 

அதன்படி கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன அவ்விருவரையும் கடந்த 2020 ஜனவரி 20 ஆம் திகதி விடுதலைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இவ்வாறான நிலையிலேயே தற்போது,  ஆணையாளர்களின்  அனுமதியுடன்  தற்போது மீள வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51