"மஹிந்­தவை சந்­தித்த பின்­னரே அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் இவ்­வாறு நடந்­து­கொள்­கிறார்" இதற்­கான பின்­னணி என்ன.?

Published By: Robert

20 Nov, 2016 | 11:53 AM
image

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­படும் கால­கட்­டத்தில் மட்டு. மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் போன்­ற­வர்கள் அதைக் குழப்பும் வகையில் அடா­வ­டித்­த­னங்­களை மேற்­கொண்டு பொது­மக்­களின் காணி­களில் புத்தர் சிலை­களை வைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு நாட்டில் இன­மோ­தல்­களை உரு­வாக்கி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை முடக்­கும்­வ­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்று மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சதா­சிவம் வியா­ழேந்­திரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி: மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் கடந்த சில காலங்­க­ளாக பட்­டி­ருப்பில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்தி வந்த மேய்ச்சல் நிலம் மற்றும் செங்­க­ல­டி­யி­லுள்ள தனியார் காணி­யொன்­றையும் ஆக்­கி­ர­மிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளார். இதற்­கான பின்­னணி என்ன?

பதில்: மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் தொடர்பில் கடந்த கால விட­யங்­களை நாம் முதலில் எண்­ணிப்­பார்க்­க­வேண்டும்.  இந்தத் தேரர் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பெரும் அடா­வ­டித்­த­னங்­க­ளையும் அட்­ட­கா­சங்­க­ளையும் புரிந்­து­வந்­தவர். அந்­த­வே­ளை­களில் இவ­ருக்­கெ­தி­ராக அன்றும் இன்றும் எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டக்­க­ளப்பு வந்­தி­ருந்த சமயம் மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு வர­வில்­லை­யென்ற கார­ணத்­தினால் குறித்த விகா­ரையில் ஜனா­தி­பதி திறப்­ப­தற்­காக எழுப்­பப்­பட்­டி­ருந்த நினை­வுத்­தூ­பியை சுத்­தி­யலால் அடித்து நொருக்கி தகாத வார்த்­தை­களால் திட்டித் தீர்த்­தவர். 

அப்­போதும் அவ­ருக்­கெ­தி­ராக சட்ட நட­ வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அண்­மையில் கட­மை­யி­லி­ருந்த பெண் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வரை துரத்தித் துரத்தித் தாக்க முயன்ற சம்­பவம் தொடர்­பி­லான காணொளிக் காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­கின. இச்­சம்­ப­வத்­திற்கு எதி­ரா­கவும் அவர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு பின்னர் மின்­சார சபை ஊழி­ய­ரொ­ரு­வ­ருடன் இடம்­பெற்ற பிரச்­சினை தொடர்­பா­கவும் எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.  இவ்­வ­ளவு சம்­ப­வங்கள் இடம்­பெற்றும் மட்­டக்­க­ளப்பு -– பதுளை வீதியில் அர­ச­ ம­ரத்­த­டியில் அமைந்­தி­ருக்கும் பிள்­ளையார் சிலைக்­க­ருகே புத்தர் சிலை வைக்­கப்­போ­வ­தாக பகி­ரங்­க­மாக அவர் அறிக்கை விட்­டுள்ளார். பாரம்­ப­ரி­ய­மாக அப்­ப­குதி தமிழ் மக்கள் செறிந்­து­வாழும் பிர­தேசம். அந்­தப்­ப­கு­தியில் இவ்­வாறு புத் தர் சிலை வைப்­பது தொடர்பில் முறைப்­பா­ டொன்று பதிவு செய்­த­போது குறித்த காணியில் அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் உள் நுழை­யக்­கூ­டாது, மரங்கள் நாட்­டக்­கூ­டாது, ஆர்ப்­பாட்­டங்கள் செய்ய முடி­யாது மற்றும் வீதியை மறிக்க முடி­யா­தென்று நீதி­வானால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.  

ஆனால் எந்­தக்­கா­ணியில் தேரரை உள்­நு­ழை­யக்­கூ­டா­தென்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டதோ அந்த காணி­யினுள்  அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் அமர்ந்­தி­ருந்தார். 

அப்­போது நான் சென்­றதும், நீதி­மன்ற உத்­த­ரவை வைத்­துக்­கொண்டு ஏன் அவரை வெளி­யேற்­றாமல் இருக்­கின்­றீர்கள் என்று பொலி­ஸா­ரிடம் கேட்டேன். அதே­ச­மயம் தேர­ருக்கு ஆத­ர­வாக பஸ் ஒன்றில் சிங்­கள மக்கள் வரப்­போ­கின்­றார்கள் என்­பதை அறிந்து கொண்டேன். அந்த வேளையில் தமிழ் மக்­களும் அங்கு கூடி­விட்­டனர். விடயம் பார­தூ­ர­மாக செல்­வ­தை­யு­ணர்ந்தேன். அதற்கு பின்னர் பொலி­ஸா­ரிடம் மீண்டும் பேசினேன். ஒரு­வாறு தேரரை அந்தக் காணி­யி­லி­ருந்து வெளி­யேற்­றினோம்.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் பிணக்­குகள் ஏற்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள்தான் காரணம். அவர்­க­ளு­டைய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இன­வாதம் மற்றும் மத­வாத கருத்­துக்­களை பரப்­பி­வந்­தனர். அதே பின்­ன­ணி­யில்தான் இந்த சம்­ப­வத்­தையும் நாம் பார்க்­கிறோம். ஏனென்றால் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா மற்றும் ராவ­ண­ப­லய போன்ற அமைப்­புகள் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அதே நிலை தற்­போது தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக திசை திருப்­பப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எப்­போது மட்­டக்­க­ளப்பு வந் தார்? மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு சென்­றாரா?

பதில்: இந்தக் குழப்ப நிலை­க­ளுக்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அவர் மட்­டக்­க­ளப்பு வந்­தி­ருந்தார். இதன்­போது மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு அவர் சென்­ற­போது அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரரை சந்­தித்தார். மஹிந்த ராஜபக் ஷவை அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் தட­பு­ட­லாக வர­வேற்றார். குறித்த விகா­ரையில் இவர்­க­ளது சந்­திப்பு இடம்­பெற்­றது.

கேள்வி: சும­ண­ரத்ன தேரரின் நட­வ­டிக்­கைகள் சமீ­பத்தில் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்க முதல் எவ்­வா­றி­ருந்­தது சந்­தித்த பின்னர் எவ்­வா­றி­ருக்­கின்­றன? 

பதில்: மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்க முன்னர் ஒருநாள் விகா­ரைக்குள் வந்­த­தற்­காக பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வ­ருடன் பிரச்­சினை ஏற்­ப­டுத்­திக்­கொண்டார். ஆனால் விகா­ரைக்கு வெளியே இவர் யாரு­டனும் பிரச்­சி­னைப்­ப­ட­வில்லை. மஹிந்­தவை சந்­தித்த பின்­னரே அவர்  பொது­இ­டங்­களில் இவ்­வாறு நடந்­து­கொள்­கிறார். அதுவும் தமிழ் மக்­க­ளது காணி­களில் புத்தர் சிலை வைப்­பது போன்ற செயற்­பா­டு­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­கிறார். இதற்கு மஹிந்த காலத்தில் சலு­கை­களை பெற்­ற­வர்கள் இந்த இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தூப­மிட்­டு­வ­ரு­கி­றார்கள். 

கேள்வி: இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தால் நாட்டில் இன­மோ­தல்கள் வெடிக்­கக்­கூடும். அதனால் இப்­பி­ரச்­சி­னையைத் தடுக்க தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது ?

பதில்: மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு ­மன்ற உறுப்­பினர் என்­ற­வ­கையில் இது தொடர்பில் ஜனா­தி­ப­திக் கும் பிர­த­ம­ருக்கும் பொலிஸ் மா அதி­ப­ருக்கும் கடிதம் அனுப்­பி­யுள்ளோம். மற்றும் புத்த சாசன அமைச்­சுக்கும் கடிதம் அனுப்­பி­யுள்ளோம். 

கேள்வி: மட்­டக்­க­ளப்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவர் புத்தர் சிலை வைப்­ பது தொடர்பில் பின்­ன­ணியில் செயற்­ப­டு­கிறார் என அறியக் கிடைத்­ததே?

பதில்: மட்­டக்­க­ளப்பில் மாங்­கேணி பிர­தே­சத்தில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டது. பின்னர் நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் அச்­சிலை அகற்­றப்­பட்­டது. தற்­போது வடக்கு, கிழக்கில் பல இடங்­களில் புத்தர் சிலைகள் வைப்பதற்கு இடம் தேடிவருகிறார்கள் என அறியமுடிகிறது.

கேள்வி: பௌத்த பிக்குகளை முன்னி லைப்படுத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன என்று நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?

பதில்: ஆம் நிச்சயமாக சந்தேகப்படுகி றேன். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத் தை நோக்கிய பயணத்தில் இவ்வாறான முயற்சிகள் சூடுபிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலேயே அதிக மாக இடம்பெறுகின்றன. அதேபோல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் முயற்சி களும் நடந்து வருகின்றன. இந்த முயற் சிகளை குறித்த தேரர் உள்ளிட்ட இனவாத மதவாத அமைப்பினர் விரைவாகவும் வேகமாகவும் முன்னெடுத்து வருகின்றனர். 

ஆகவே இங்கு இவ்வாறான நடவ டிக்கைகள் சரியாகத் திட்டமிட்டு நடந்து வருகின்றன. அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் தன்னை யாராவது தாக்க மாட்டார்களா என்ற எண்ணத்திலேயே நடந்து கொள்வதுபோல தெரிகின்றது. 

இதன் மூலம் நாட்டில் பெருங்குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவரது நோக்கமாக இருக்கலாம். இந்த நேரம் தமிழ்மக்களை அமைதியாக இருக்கும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55