வேலிபருத்தியின் மருத்துவ குணங்கள்

Published By: Digital Desk 7

28 Sep, 2022 | 11:45 AM
image

கால் வீக்கங்கள் மற்றும் உடம்பில் அடிப்பட்ட வீக்கங்களுக்கு வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து சிறிது சுண்ணாம்பு கலந்து பூசி வர அவை சரியாகும்.

வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து தேன் கலந்து அருந்திவர இருமல் குணமாகும். வேலிபருத்தி இலையை நன்கு மை போல் அரைத்து நகச்சுற்று, மற்றும் கண்டமாலை இவைகளுக்கு பற்று போட அவை சரியாகும். உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்புகளுக்கு வேலிபருத்தி இலை சாற்றை தடவ குணமாகும்.

உத்தாமணி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல் வாதம், முடக்குவாதம், இடுப்புவலி முதலியன சரியாகும். உத்தாமணி வேரை பொடி செய்து 2 அல்லது 4 சிட்டிகை எடுத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க பேதியாகும். பூச்சி கிருமிகள் சாகும்.

வேலிபருத்தி இலை சாற்றில் மிளகை 7 முறை ஊறவைத்து காயவைத்து சிறிது பால் சேர்த்து உண்டு வந்தால் செரியாமை மந்தம் சரியாகும். உத்தாமணி வேர் 5  கிராம் எடுத்து அரைத்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி 3 நாள் காலை மட்டும் கொடுக்க நஞ்சுகடி, கரப்பான், பிடிப்பு முதலியன சரியாகும்.

வேலிபருத்தி நெஞ்சில் இருக்கின்ற கோழையை அகற்றுவதோடு புழுக்களை கொல்லும் தன்மையுடையது. வேலிபருத்தி இலையில் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அருந்திவர ஆஸ்துமா, பாம்புகடி சரியாகும். நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை கட்டிவந்தால் புண்கள் விரைவில் சரியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04