மக்களின் பொருளாதார நெருக்கடியை கனடாவுக்கான பிரதி உயர் ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார் அருட்தந்தை சந்துரு பெர்னாண்டோ

Published By: Digital Desk 5

28 Sep, 2022 | 11:57 AM
image

இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தொடரும் பட்சத்தில் இலங்கையில் நடுத்தர வர்க்கம் காணாமல் போய்விடும் என ஜனனம் அறக்கட்டளை பணிப்பாளரும் சர்வதேச இசை கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ் சந்துரு பெர்னாண்டோ அடிகளார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் கனடாவுக்கான பிரதி உயர் ஸ்தானிகர் டேனியல் பூட்டை செவ்வாய்க்கிழமை (27) அன்று சந்தித்த போதே அருட்தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையில் நடுத்தர வர்க்கம் என எதுவும் இருக்காது என்றும் மேல்தட்டு மற்றும் தாழ்நிலை  வகுப்பினரே காணப்படுவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக உலகில் சிறந்த தேயிலையை உற்பத்தி செய்யும் இலங்கையின் மலையகத்தில் உள்ள தோட்ட தொழிலாள வர்க்கத்தினருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்பது சிம்மசொப்பனமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள இலங்கையில் நாளாந்த வாழ்க்கைச் செலவுகளுக்கு நாளொன்றிற்கு மூவாயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் தற்போதைய நிலைமையை அருட்தந்தை எடுத்துரைத்த போது அதனை புரிந்துகொண்ட கனடாவுக்கான பிரதி உயர் ஸ்தானிகர், கனடாவில் உள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்