3 வேளையல்ல 6 வேளை சாப்பிடலாம்!

Published By: Digital Desk 7

28 Sep, 2022 | 03:12 PM
image

ன்னது ஆறு வேளையா? கட்டுப்படியாகுமா? உங்கள் கேள்வி புரிகிறது. மூன்று வேளை உணவு உண்ணும் முறையை ஆறு வேளை உணவு உண்ணும் முறையாக மாற்றிக்கொள்ளும்படி ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆய்வொன்று முன்னதாக கூறியிருந்தது.

ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் நீண்ட காலமாக செய்துவந்த ஆராய்ச்சிகளின் பலன் இது. மூன்று வேளைக்குப் பதிலாக ஆறு வேளை சாப்பிட்டாலும், அதே அளவு கலோரி உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

நமக்காக வரையறுக்கப்பட்ட கலோரிகளின் அளவை அதிகரித்துக்கொள்ளாமல், அந்த உணவுத்திட்டத்தை ஆறு வேளைகளுக்குப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அப்படி செய்கிறவர்களுக்கு இரத்த சர்க்கரையில் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். ப்ரீ-டயபடிக் நிலையிலிருக்கிற ஆரம்ப நிலை நீரிழிவாளர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும், டைப் 2 வகை நீரிழிவாளர்களுக்கும் ஆறு வேளை உணவுத்திட்டம் உகந்தது.

இம்முறையை பரிசோதித்துப் பார்த்ததில், கிளைகேட்டட் ஹீமோகுளோபின் மற்றும் குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. 

பொதுவாக வயிறு நிரம்பியிருப்பது போலவே இவர்கள் உணர்ந்தார்கள். மிக முக்கியமான விடயம்... 24 வாரங்களில் இவர்களின் எடை அதிகரிக்கவில்லை!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்