தெஹிவளை, பெபிலியான சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் நேற்று இரவு தீ பரவியுள்ளது.

குறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பனவே தீக்கிரையாகியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீவிபத்தின் காரணமாக 40 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபையின் தீயணைப்பு வண்டிகள் உரிய நேரத்தில் வரத் தவறியதன் காரணமாக தீ விபத்தின் சேதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.