ஜின்ஜியாங்கில் தனது பாரிய மனித உரிமை மீறல்களை சீனா தனது மக்களிடமிருந்து மறைக்கின்றது

Published By: Rajeeban

27 Sep, 2022 | 04:39 PM
image

காணாமல்போன கல்விமான்கள் செயற்பாட்டாளர்கள் கலைஞர்கள் - பாரிய தடுப்பு முகாம்கள் - கட்டாய கருத்தடை-தரைமட்டமாக்கப்பட்ட மசூதிகள் - இனச்சிறுபான்மையினரை சீனா தன்னுடன் கட்டாயமாக இணைத்தமைக்கான ஆதாரங்கள்  இவை.

ஆனால் தனது சொந்த மக்கள் இவற்றை பார்ப்பதற்கு சீனாஅனுமதிக்காது.

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் தணிக்கை குழு தீவிரமாக வேலைசெய்கின்றது.

இணையச்சேவையை ஏனைய உலகத்துடன் இணைந்து பிரிப்பதில் கிரேட் பயர்வோல்  முழுமையாக இயங்குகின்றது.

இதன் காரணமாக சீனாவின் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநாவின் கடுமையான அறிக்கை குறித்து சீனா மக்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை.

கட்டாய மருத்துவ கிசிச்சை மோசமான நிலைகளில் தடுத்து வைக்கப்படுதல் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் குறித்த அறிக்கைகள் நம்பகதன்மை வாய்ந்தவை என தெரிவித்துள்ள ஐநா பாலியல் மற்றும் பாலினரீதியிலான வன்முறைகள் குறித்த தனிப்பட்ட சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் நம்பகதன்மை வாய்ந்தவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் திபெத் ஜின்ஜியாங் மாகாணத்தில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த 46 பக்க ஐநா அறிக்கை குறித்து வீசட் வெய்போ குறித்த சமூக ஊடகங்களில் ஏதாவது தகவல் வெளியாகின்றதா என்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது.

ஐநாவின் ஆவணத்துடன் தொடர்புள்ள விடயங்கள் நீக்கப்படுகின்றன.

மேலும் சீனா சர்வதேச சமூகத்தின் மீதான தனது சீற்றத்தை  வெளிப்படுத்தாமல் இல்லை.

அது தனது உத்தியோகபூர்வ பதிவில் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது - ஐநா சீனாவை அவதூறு செய்கின்றது,சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்கின்றது என தெரிவித்துள்ளது.

சீனா உடனடியாக உய்குர் மக்களின் தீவிரவாதம் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த 122 பக்க ஆவணத்தை வெளியிட்டது.

மேலும் அதன் வூல்வோரியர் இராஜதந்திரிகள் மற்றும் வர்ணணையாளர்கள் அந்த அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவமதிப்பு இழிவு செய்வதற்கு முயல்கின்றனர்.

ஆனால் வேறு விடயங்களும் இடம்பெறுகின்றன

ஐநாவின் ஆவணத்தை சீன மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான தனது முயற்சிகள் தடுக்கப்பட்டன என சீனாவிற்கான  அமெரிக்க தூதுவர் நிக்கொலஸ் பேர்ன்ஸ் தெரிவிக்கின்றார்.

அதிகளவிற்கு முஸ்லீம்களான உய்குர் மக்களிற்கு எதிராகவும் ஜின்ஜியாங்கில் உள்ள ஏனைய மத இன சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிராகவும் சீன முன்னெடுத்துள்ள இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த எங்கள் ஆழ்ந்த கவலையை உறுதி செய்கின்றது ஆழமாக்குகின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஜின்ஜியாங் அறிக்கை வெளியாகி பல மணிநேரத்தின் பின்னரும் சீனாவிற்குள் இது குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் என்கின்றார் சைனா மீடியாவின் திட்ட இயக்குநர் டேவிட் பாண்டுர்ஸ்கி.

ஜின்ஜியாங் குறித்த ஐநாவின் அறிக்கை சீன கம்யுனிஸ்ட் கட்சி இந்த விடயத்தை கையாளும் விதம் குறித்து பல தகவல்களை தெரிவி;த்துள்ளது.

சீன கம்யுனிஸ்ட் மதபழக்க வழக்கங்கள் தொடர்பாக தனிப்பட்ட விடயங்களாக கருதப்படுபவற்றை தீவிரவாதம் என தெரிவிப்பதுடன் தீவிரவாதத்துடன் இணைக்கின்றது என ஐநா தனது அறிக்கையி;ல் தெரிவி;க்கின்றது.

இது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது சாக்குபோக்குகளின் கீழ் இலக்குவைக்ககூடிய நடவடிக்கைகளின் வரம்பை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கின்றது.

இந்த நடத்தைக்கான ஆதாரங்கள் ஐநா அறிக்கையில் காணப்படுகின்றன.

ஐநாவின் அறிக்கை பாலியல் வன்முறை பெருமளவில் தடுத்துவைத்தல் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல்  உட்பட சித்திரவதைகள் பரந்துபட்ட காண்காணிப்பு குறி;த்த நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை விபரிக்கின்றது என தெரிவிக்கின்றார் நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தின் சட்டபேராசிரியர் ஜஸ்டின் நோலன்.

சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநாவின் அறிக்கை ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு இக்கட்;டான தருணத்தில் வெளியாகியுள்ளது.

அவர் ஒக்டோபர் 16 ம் திகதி தேசிய காங்கிரசில் வாழ்க்கையின் சிறந்த தலைவராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார்.

ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாத்திரம் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

சீன ஜனாதிபதி ஓய்விற்கு சென்றிருக்ககூடிய காலவரம்புகளை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி கைவிடுகின்றது என்பதற்கான அங்கீகாரம் இது.

ஐநா அறிக்கை குறித்த சீனாவின் மௌனம்,ஜின் ஜியாங் என்பது சீனாவின் அரசியல் தலைமைக்கு மிகவும் உணர்வுபூர்வமான விடயம் வெளிநாடுகளை சேர்ந்தவகளிற்கான மெகாபோன்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுகின்றது என தெரிவிக்கின்றார் பன்டேர்ஸ்கி.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என தெரிவிப்பதற்கு இன்னமும் தயாரில்லை.

அந்த வார்த்தை - செயல் இல்லை - கடுமையான சட்டரீதியான எதிர்விளைவுகளை கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17