14 ரயில் பெட்டிகள் தடம் புரள்வு: 63 பேர் பலி.! (படங்கள் இணைப்பு)

Published By: Robert

20 Nov, 2016 | 09:18 AM
image

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

இதில், அந்த ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற்றொன்று பயங்கரமாக மோதியதால் பெட்டிகளின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர். குறிப்பாக, இரண்டு ஏ.சி. பெட்டிகள் உள்பட நான்கு பெட்டிகள் மிகவும் சேதமடைந்து உருக்குலைந்துப் போய் கிடக்கின்றன.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், நசுங்கிய ரயில் பெட்டிகளில் சிக்கி, உயிருக்கு போராடிய பலரை உயிருடன் மீட்டனர். 

இன்று காலை 8 மணிநிலவரப்படி, ரயில் பெட்டிகளில் உடல் நசுங்கிய நிலையில் கிடந்த 45க்கும் அதிகமான பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள் பஸ்களின் மூலம் தங்களது பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தின் குறுக்கே பரவலாக விழுந்து கிடப்பதால், இந்தப்பாதை வழியாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த கோரவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரெயில்வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி ரயில் வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான உடனடி தகவல்களை பெறுவதற்கான உதவிமைய எண்களை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தகவல் அறிய விரும்புபவர்கள், இந்தூர்- 07411072, உஜ்ஜைன் - 07342560906, ரட்லம் - 074121072, ஓராய் - 051621072, ஜான்சி - 05101072, போக்ராயா - 05113270239 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52