சிறுவர் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் - யுனிசெப் உறுதி

Published By: Digital Desk 4

26 Sep, 2022 | 09:24 PM
image

(நா.தனுஜா)

சிறுவர்களின் போசணை மட்டத்தை உயர்த்துதல் உள்ளடங்கலாக சிறுவர் நலனை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளனர்.

 நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், யுனிசெப் அமைப்பின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி மிரன்டா ஆம்ஸ்ரோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நடைபெற்றது.

 இச்சந்திப்பின்போது அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச்சட்டமூலம், சிறுவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச்செல்வதற்குப் பதிலாக அவர்களது குடும்பத்தாருடன் இருக்கும்போதே புனர்வாழ்வளித்தல், பாடசாலை செல்லும் மாணவர்களின் போசணை மட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 அதன்படி சிறுவர்களின் போசணைமட்டத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் சில விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போசாக்கான ஒருவேளை உணவை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நீதியமைச்சர் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

 அதற்குப் பதிலளித்த யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள், நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்களின் நலனை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களுக்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10